உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியாறு அணை உடையும் என்றவர் வாங்கிய ஓட்டு 4437 - நோட்டாவை விட குறைவு

பெரியாறு அணை உடையும் என்றவர் வாங்கிய ஓட்டு 4437 - நோட்டாவை விட குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்: பெரியாறு அணை உடையும் என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி கேரள மக்களையே தன் வசம் இழுத்த ரசல்ஜோய் இடுக்கி தொகுதியில் வாங்கிய ஓட்டு 4437. இது நோட்டாவை விட குறைவாகும்.முல்லைப் பெரியாறு அணை உடையப் போகிறது என தொடர்ந்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்து கேரள மக்களின் கதாநாயகன் ஆனவர் ரசல்ஜோய். 'சேவ் கேரளா' என்ற முழக்கத்தை முன்வைத்து அமைப்பை துவக்கி நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவர் இடுக்கி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக இருந்தார். கேரள மக்களிடம் பெரியாறு அணை விசயத்தில் பிரபலமான இவர் வாங்கிய மொத்த ஓட்டுகள் 4437 ஆகும். தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த ஓட்டுகள் 9519. நோட்டாவை விட குறைந்த ஓட்டுகள் வாங்கிய இவரை இடுக்கி மாவட்ட மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Alagusundram KULASEKARAN
ஜூன் 09, 2024 15:52

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


தமிழ்
ஜூன் 06, 2024 12:33

விஷமாப்பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களிடம் பிளவை உண்டு பண்ணும் இதுபோன்ற நபர்களை விலக்கிவைப்பதுதான் நல்லது.


veeramani
ஜூன் 06, 2024 09:29

தென் தமிழகத்தில் வசிக்கும் விவசாயியின் கூக்குரல் ... மலையாள மக்களும் பாண்டிய நாட்டு மக்களும் சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளாக தொப்புள்கொடி உறவுகள். அதேபோல இலங்கையில் தமிழ்பேசும் மக்களும் அதே உறவுகள். எங்களது கலாச்சாரம் மழையால் மக்களின் போக்கில் இருக்கும் தென் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி போன்றவைகல் மழையால் மக்களுக்கு கொடுக்கிறோம் அவர்கள் தண்ணீர் தருகின்றனர். எங்களுக்கு உள்ளாக எந்த ஒரு வேறுபாடு கிடையாது. ஆனால் எழுபதுகளில் இருந்து ஒரு துவேசம் கிளப்பப்பட்டது. இதற்கு பதித்தான் இடுக்கியுள் உள்ளவர்கள் என்பது டெசிபலில் கத்தினார் இதற்கு தீர்வு மய்ய அரசின் கையில் உள்ளது. விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் திரு நரேந்திர மோடி பாய் ஜி அவர்கள் தீர்த்துவைப்பர் என ஆண்டவனிடம் வேண்டுகிறேன்


Indhuindian
ஜூன் 06, 2024 06:04

இதே மாதிரிதான் நம்ம பெங்களுருவில் வாட்டாள் நகராஜ்ன்னு ஒருத்தரு காவேரி தண்ணி தமிஷ்னாட்டுக்கு குடுக்கக்கூடாதுனு எப்பவும் ஆர்பாட்டம் பண்ணுவாரு அவரும் தேர்தல்ல போட்டி போட்டு காலி ஆயிட்டாரு தண்ணி வேணா போடலாம் ஆனா தண்ணிய வெச்சி ஆட்டம் போடக்கூடாது


பிரேம்ஜி
ஜூன் 06, 2024 08:39

சூப்பர் கமெண்ட். நன்றி.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை