தி.மு.க., ஆட்சியில் இருந்தால் பாலியல் பிரச்னைகள் இருக்கும்
சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். அழிவு சக்தி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்றே நீதி போதனை வகுப்பு அகற்றப்பட்டு விட்டது. பள்ளியில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். அப்போது தான், அடுத்த தலைமுறையாவது ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தி.மு.க., ஆட்சியில் இருந்தால், இதுபோன்று தான் நடக்கும்.ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் செயல் சட்ட விரோதமானது. 500 ரூபாய் நோட்டுக்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிப்பார்களா? தி.மு.க., அரசு, சட்டவிரோத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க தி.மு.க., அரசுக்கு திராணியில்லை. தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் மரத்தடியில் தான் வகுப்புகளே நடக்கின்றன. ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,