உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை: இன்று (ஜூன் 17) பக்ரீத் பண்டிகை உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக முஸ்லீம்களால் கொண்டாடப்படுகிறது. ‛ஹஜ்' செய்வது என்பது இஸ்லாம் மதத்தின்படி வாழ்நாளில் ஐந்தாவது முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. ஹஜ் என்பது புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும்இந்த புனிதப் பயணத்தின் கடைசி கடமையாக இருப்பது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடக்கும். இப் பெருநாளில் தொழுகை நடந்த பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. இத்திருநாளில் இந்தியாவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் கூட்டமாக சென்று தொழுகையில் ஈடுபடுவார்கள். முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கெள்வர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):

பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 17, 2024 15:43

ஹிந்து பண்டிகை கு மட்டும் நாம மத சார்பற்ற முதல்வர் வாழ்த்து சொல்ல மாட்டாரு .


M S RAGHUNATHAN
ஜூன் 17, 2024 13:10

மிருகங்களை மதத்தின் பெயரை சொல்லி கொல்வது வழக்கம் என்றால் பட்டாசுகளை தீபாவளி அன்று வெடிப்பது ஹிந்துக்கள் வழக்கம் என்று அனுமதி தர வேண்டியது தானே? ஏன் நேரம் குறிப்பிடுகிறீர்கள். மிருகங்களை சட்டப் படி பரிசோதித்து விட்டு தான் கொல்கிறார்களா? அதற்கு இடம், நேரம் குறிப்பிட்டீர்களா? அரசு அறிக்கை விடுமா?


R.Subramanian
ஜூன் 17, 2024 12:49

மதத்தின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஒன்றிணைந்து விட கூடாது என்பதில் ஆங்கிலேயர்களின் ஆரம்பித்து தற்போது திராவிட அரசியல் வரையில் தொடர்கிறது. ஹிந்துக்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்து நிரந்தரமாக பிரித்து இருக்கிறார்கள் இனி ஹிந்துக்களாக தமிழர்கள் ஒன்றிணைவது கடினம். இந்த பிரிவினைக்கு சமூகநீதி என்று பெயர் வைத்தும் இருக்கிறார்கள்


R.Subramanian
ஜூன் 17, 2024 12:49

மதத்தின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஒன்றிணைந்து விட கூடாது என்பதில் ஆங்கிலேயர்களின் ஆரம்பித்து தற்போது திராவிட அரசியல் வரையில் தொடர்கிறது. ஹிந்துக்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்து நிரந்தரமாக பிரித்து இருக்கிறார்கள் இனி ஹிந்துக்களாக தமிழர்கள் ஒன்றிணைவது கடினம். இந்த பிரிவினைக்கு சமூகநீதி என்று பெயர் வைத்தும் இருக்கிறார்கள்


M S RAGHUNATHAN
ஜூன் 17, 2024 12:06

ஹிந்து பண்டிகைகள். வரலாற்றை கேலி செய்யும் உதயநிதி அவர் தந்தை ஸ்டாலின் அவற்றின் நம்பகத் தன்மையை கேள்வி கேட்பது போல் பக்ரீத் பண்டிகையின் வரலாற்றை கேள்வி கேட்பாரா அல்லது கேலி செய்வாரா? இவர்கள் மத சார்பற்றவர்களாம். வெட்கப் கேடு. வீரமணி, சுப வீ ஆகியோர் முக்காடு போட்டு கொண்டு வீட்டில் இருப்பார்கள்.


Kumar Kumzi
ஜூன் 17, 2024 12:44

இந்துக்களை எவ்வளோ காறித்துப்புகிறான் இந்த இந்துமத ஜென்ம விரோத திராவிஷ விடியல் கூட்டம் தெரிந்தும் இந்த இந்து கூமுட்டைங்க இவனுங்களுக்கு தானே ஓட்டு போடுறானுங்க


M S RAGHUNATHAN
ஜூன் 17, 2024 11:59

லட்சக்கணக்கான ஆடுகள், ஒட்டகங்களை மதத்தின் பெயரால் பலி இடுவது சரியா? சனாதன எதிர்ப்பாளர்கள் கோயில்களில் பால், தயிர் ஊற்றி அபிஷேகம் செய்வதையும், பெண்கள் விசேஷ தினங்களில் புற்றுக்கு பால் விடுவதையும் கிண்டலாக விமர்சிப்பது சரியா? அவர்கள் இப்படி இஸ்லாமியர்கள் மிருக பலி கொடுப்பதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. பயம். பேசினால் தலை அவர்கள் உடம்பில் இருக்காது என்று தெரியும்.


Ramesh Sargam
ஜூன் 17, 2024 11:49

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து. ஆனால் ஒரு ஹிந்து பண்டிகைக்கும் இவர் வாழ்த்து தெரிவிக்க மாட்டார். என்ன முதல்வரோ இவர்? வெட்கமாக இருக்கிறது இப்படிப்பட்ட முதல்வர் தமிழகத்தை ஆள்வது.


Senthil K
ஜூன் 17, 2024 10:58

இந்த முறை... மூர்க்கன் ஓட்டுக்கள் .. பெரும் பகுதி.. எங்கள் அதிபருக்கு..போய் விட்டதால்..இனி திராவிட அதிபர்..வாழ்த்துச் சொல்ல மாட்டார்...


Kannan Soundarapandian
ஜூன் 17, 2024 10:58

ஈத் முபாரக்


ManiK
ஜூன் 17, 2024 10:07

தமிழ்ஸ்தான் CM இதுக்கு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி