உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு வழிச்சாலையில் தார் சாலை பணி திண்டிவனம் பைபாசில் டிராபிக் ஜாம்

நான்கு வழிச்சாலையில் தார் சாலை பணி திண்டிவனம் பைபாசில் டிராபிக் ஜாம்

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் நான்கு வழிச்சாலையில், ஒரு பக்கத்தில் புதிதாக தார் சாலை போடும் பணியால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், உளுந்துார்பேட்டை முதல் திண்டிவனம் வரையிலான நான்கு வழிச்சாலையில் சென்னை மார்க்கத்தில் தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது, திண்டிவனம் ஜக்காம்பேட்டை புறவழிச்சாலையில் நடக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பேரிகார்டுகள் வைத்து இரு வழியாக பிரித்து வாகனங்கள் ஒரே சமயத்தில் திருப்பிவிடப்பட்டது.இதனால் புறவழிச்சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று வார விடுமுறை நாள் என்பதால், தென்மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்த அதிக அளவு வாகனங்கள்வந்ததால், புறவழிச்சாலையில் தேங்கியிருந்த வாகனங்கள் போக்குவரத்து போலீசார் மூலம் ஒழுங்குபடுத்தப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி