உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

சென்னை: 'அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்' என, மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில், அனைத்து தரப்பினருக்கும், புறநோயாளிகள் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம், முதல்வர் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே, இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி உள்ளது. இது, அரசு மருத்துவமனைகளில் ஏற்கப்படாமல் இருந்தது. அதனால், அவர்களுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டை வழங்கப்படாமல் இருந்தது. எனவே, அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்தது.இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன் பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், 5 லட்சம் ரூபாய் வரை, அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை பெறலாம். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை சிறப்பு சிகிச்சைகளையும் பெறலாம்' என்று கூறப்பட்டுள்ளது.நிதித்துறை ஒப்புதலோடு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 09, 2024 17:07

அரசு பணியில் அரசின் சம்பளம் வாங்குவோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. பின்னர் அரசு மருத்துவ மனைகளில் மட்டும் எப்படி சிகிச்சை பெறுவார்கள். நம்ப முடியவில்லை. நாற்பதுக்கு நாற்பது தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி