உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரம்பிக்கவே இல்ல...அதுக்குள்ள நடிகர் விஜய்க்கு எழுந்த சிக்கல்! பொங்கும் ரசிகாஸ்

ஆரம்பிக்கவே இல்ல...அதுக்குள்ள நடிகர் விஜய்க்கு எழுந்த சிக்கல்! பொங்கும் ரசிகாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சியின் முதல் மாநாட்டை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்தலாமா என்று நடிகர் விஜய் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரக்க வைத்திருக்கின்றன.

அரிதாரம்

தமிழக வெற்றிக்கழகம் என்னும் பெயரில் அரசியல் அரிதாரம் பூசிய நடிகர் விஜய், அடுத்தடுத்த தமது அரசியல் பயணத்தை வடிவமைத்து வருகிறார். கட்சிக் கொடி, பாடல் என சட்டென்று வேகம் எடுத்த அவரது பயணம் இப்போது அரசியல் மாநாடு என்ற கட்டத்தில் வந்து நின்று கொண்டிருக்கிறது. மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை அறிவிப்போம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி மாநாட்டை நடத்த முடிவெடுத்து இருந்தார்.

மனு

மாநாட்டுக்கான அனுமதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 28ம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் முறைப்படி மனு அளித்தார். அந்த மனுவில் வி.சாலையில் உள்ள இடத்தில் மாநாடு நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, த.வெ.க., புஸ்சி ஆனந்திடம் மாநாட்டில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி.க்கள் விவரம், வாகன நிறுத்துமிடம், மேடை அளவு என மொத்தம் 21 கேள்விகளை எழுப்பி உரிய பதில் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் வழங்கி இருக்கிறது.

என்ன செய்யலாம்?

இந் நிலையில் மாநாடு விவகாரத்தில் லேட்டஸ்டாக அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தால் என்ன செய்வது என்று நடிகர் விஜய் தீவிர ஆலோசனையில் இருப்பதாக த.வெ.க., வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்திவிடலாம் என்று விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மழைக்காலம்

அதற்கான காரணம் ஒன்றும் இருக்கிறது. இனி வரும் அடுத்த 3 மாதங்கள் மழைக்காலம் என்பதால் அந்த காலக்கட்டத்தில் மாநாடு நடத்தினால் சிறப்பாக இருக்குமா? ஆண்டின் தொடக்கமாக எழுச்சியுடன் ஜனவரியில் மாநாடு நடத்தினால் என்ன என்ற யோசனையில் விஜய் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜோதிடர்

ஜனவரி மாதம் சரியாக இருக்குமா? என்று புஸ்சி ஆனந்த் பிரபல ஜோதிடர் ஒருவரை அணுகி இருப்பதாகவும் த.வெ.க., வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மாநாடு தேதி தள்ளிப்போனால் என்ன செய்வது என்று கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ரசிகர்கள், கட்சியினர் உள்ளனர் என்பது தான் இப்போதைய நிலவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Saleem
செப் 02, 2024 17:55

தற்குறிகளை எல்லாம் அதி மேதாவிகளாக நினைத்து அவர்களை ஆலோசர்களாக வைத்தால் இப்படித்தான்


தமிழன்
செப் 02, 2024 17:05

இங்கே சோதிடம் பார்க்கப்படும்


Jagan (Proud Sangi)
செப் 02, 2024 17:03

ஈஸ்டர் ஞாயிறு உயிர்த்தெழுந்த நாள் சிறப்பான நாளா இருக்கலாம் அவுங்களுக்கு இந்தியர்களுக்கு இல்ல


Ms Mahadevan Mahadevan
செப் 02, 2024 15:44

இவருக்கு என்ன ஆச்சு? இவரே காருக்கு ஒழுங்கா வரி கட்டவில்லை, கருப்பில்தான் படத்துக்கு சம்பளம் வாங்கீருப்பார். இவர் எப்படி ஊழல் இல்லாத ஆட்சி தருவார்.,? மதுவிலக்கு, அரசு கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி, சம உரிமை சம வாய்ப்பு தர்வென் என்று கொள்கை சொல்லுவா ரா? பிறகு எதுக்கு புது கட்சி? இருக்கிற கட்சிகளால் ஏமாந்தது போதாதா?


Narayanan
செப் 02, 2024 15:19

விஜய் கட்சி தொடங்கித்தான் நோக்கம் இதுதான் . நாம் இன்னும் 15 ஆண்டுகள் நடித்தால்தான் 3000 கோடியை பார்க்கமுடியும் . உதயநிதி அவரது கட்சி மூலம் 35,000 கோடியை இரண்டே வ்ருஷத்தில் சம்பாத்தித்தாக திமுகவை சேர்ந்த பழனிவேல் ராஜனே சொல்லும் போது எதற்கு 15 வருஷம் நடிக்க வேண்டும் ? கட்சியை தொடங்கினால் நாமும் சீமான் மற்றும் உதயநிதிபோல் வந்துவிடலாம் என்று வந்திருக்கிரார் .


Anbu Raj
செப் 02, 2024 14:02

இது வரை மக்கள் பிரச்னை எதுக்கும் போராடாத பயந்தாங்கொள்ளி விஜய் அரசியல் எடுபடாது , திரைக்கவற்சி மட்டும் போராதுடா குமாரு


kulandai kannan
செப் 02, 2024 16:34

மக்கள் பிரச்சினைக்கு போராடுவது என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டு ப்ளீஸ்.


அஸ்வின்
செப் 02, 2024 13:29

வேசம் கட்டுணமா நாலுகாசு பாத்தமானு பேகனும் உன்ன விட ஜாம்பவான்கள் மன்ன தின்ற இடம் இது


Lion Drsekar
செப் 02, 2024 13:22

இனி இருக்கு திருக்கோவிலில் அமர்ந்த காவல்துறை உயர் அதிகாரி பெட்டியே இருக்கு , திருக்கோவிலும் அமர்ந்து பேசக்கூடாது ? இன்று அன்னதானம் வழங்கிய பாம்பன் ஸ்வாமிகள் திருக்கோவிலில் அனுமதி இல்லை, வீடியோ சாட்சி, இயற்க்கை என்று ஒன்று இருக்கிறது அது மனித உருவில் இருக்கும் மிருகங்கள் எதை நோக்கி டீ ஹவரான பாதைகளில் பயணிக்கிறதோ அனைத்துக்கும் ஒரு பாடம் கண்டிப்பாக கற்ப்பிக்கும், நல்லார் எவருமே இனி உலராமல் இருந்தால் நல்லது , இல்லையென்றால் அவர்களுக்கும் சிக்கல்கள் எழும் . வந்தே மாதரம்


சமூக நல விரும்பி
செப் 02, 2024 13:14

விஜய்யை இனி நிம்மதியாக உறங்க விட மாட்டார்கள்


கூமூட்டை
செப் 02, 2024 12:52

மாநாட்டில் சம்பாதிக்க வழி தேடல். ஆட்களின் சொல்வது என்ன??


முக்கிய வீடியோ