உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்னியர் மீது தி.மு.க.,வுக்கு வஞ்சம், வன்மம்: ராமதாஸ்..

வன்னியர் மீது தி.மு.க.,வுக்கு வஞ்சம், வன்மம்: ராமதாஸ்..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வன்னியர்கள் மீதுள்ள வஞ்சம், வன்மத்தால் தி.மு.க.,வுக்கு, 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க மனமில்லை' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, ஜூலை 11ல் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'ஜாதிவாரி மக்கள்தொகை விபரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.ஆனால், இப்போது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது. தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை. மத்திய அரசும் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இல்லை. எனவே, ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால், எந்த பயனும் இல்லை. இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், 'நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன்' என்று, தமிழக அரசும், ஆணையமும் இணைந்து, வன்னியர் சமூக நீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.இதை பாட்டாளி மக்கள் நன்கறிவர். காலம் வரும்போது, நன்றி மறந்த தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RAAJ68
ஆக 02, 2024 16:16

உங்களிடம் இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது கஷ்டப்படும் வன்னியர்களுக்கு பிரித்துக் கொடுங்கள்.


முருகன்
ஆக 02, 2024 15:03

ஒட்டு வாங்க எந்த எல்லைக்கும் சொல்ல கூடியவர் நாட்டில் ஜாதி அரசியல் ஒழிக்க பட வேண்டும்


ramesh
ஆக 02, 2024 12:39

மற்ற ஜாதி இனர் மீது தங்களுக்கு வஞ்சமா


ஆரூர் ரங்
ஆக 02, 2024 12:14

SC ST இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயரை பின்பற்றுவது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. உயர்பதவியில் அமலாக்கப்பட்டால் போதுமான தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. திறமையான அறிவாளிகள் மட்டும் அந்தப் பதவிகளில் இருப்பது நாட்டுக்கு நல்லது


Velan Iyengaar
ஆக 02, 2024 15:09

கட்டாயம் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கு? மாநிலங்கள் இதை பரிசீலிக்கவேண்டும் தான் சொல்லி இருக்கு.


Raj Kamal
ஆக 02, 2024 11:16

இந்த வன்னியர் உலகத்தில் இருந்து வெளியே வந்து அணைத்து சமூகத்திற்காகவும் போராடுங்கள், இல்லையேல் வெறும் வன்னியர் கட்சியாகவே அறியப்படுவீர்கள். மட்டுமல்ல, நீங்கள் வன்னியர்களுக்காகவும் எதுவும் செய்ததாக தெரிவில்லை. எனில், யாருக்காக இந்த வெற்று அறிவிப்புகள்?


தியாகு
ஆக 02, 2024 11:08

சிறுத்தை குட்டீசின் குருமாவுக்கு இருக்கும் அறிவும் ராஜதந்திரமும் முப்பது வருடங்களாக அரசியல் கட்சி நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இருப்பதில்லை. மத்திய அரசு என்று வந்துவிட்டால் சிறுத்தை குட்டீசின் குருமாவும் அதன் தொண்டர்களும் காங்கிரஸ் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து ஓட்டு போடுவார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தேவை இல்லாமல் மோடிஜியை பற்றியும் கார்பொரேட் பற்றியும் கிண்டல் செய்து திராவிட கட்சிகளுக்கு மறைமுகமாக உதவுவார்கள். மாநில அரசியல் செய்யும் பாமக மத்தியில் மோடிஜியை ஏற்றுக்கொண்டு பாஜகவை நூறு சதவீத வன்னியர்களும் ஆதரிக்காவிடில் பாமக இப்படியே புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான், யாராச்சும் இதை பாமக தலைவர்களுக்கும் அறிவில்லாமல் மோடிஜியை எதிர்க்கும் வெத்து வேட்டு பாமக தொண்டர்களுக்கும் எடுத்து சொல்லுங்கப்பா.


Velan Iyengaar
ஆக 02, 2024 11:58

அதுக்கு காரணம் தமிழக நிலவரம் ...


MADHAVAN
ஆக 02, 2024 11:02

என்னை தவிர என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் னு சொன்னியே? அன்புமணி உனக்கு மகன் தானே ? சாதி சாதி னு பேசுற உனக்கு உன் குடும்பத்தை தவிர யாருக்கும் பதவி தரமாட்டேங்குற? அன்புமணி மனைவிதான் உனக்கு தெரியுதா ? மற்ற கட்சிக்காரங்களை உனக்கு தெரியாத ?


P. SRINIVASALU
ஆக 02, 2024 10:11

உனக்கெல்லாம் தகுதியில்லை அரசியல் பேச


Velan Iyengaar
ஆக 02, 2024 10:07

மரம்வெட்டி பெட்டிக்கு ஆசைப்படாமல் அவர் ஜாதிக்கு உண்மையாக இருந்திருந்தால் தேர்தல் தேதி அறிவிக்க சில மணிநேரங்களே இருக்கும் சமயத்தில் உள் ஒதுக்கீடு ஆணையை அவசரகதியில் இடும்படி கேட்டிருக்கமாட்டார். அன்று வன்னிய மக்களை ஏமாற்ற மரம்வெட்டியும் தவழ்ந்தபாடியும் சேர்ந்து நாடகம் நடத்தும்போது.. வன்னிய மக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டது எல்லோருக்கும் தெரியும். இப்போ திமுக மீது பாய்கிறார் வேறு கதி? மகனுக்கு ராஜ்யசபை சீட் திமுக மீது பாய்ந்தால் தானே கிட்டும் ...அப்பட்டமான சுயநலனுக்கு வன்னியர்களை பலி கொடுக்கும் வன்னிய சமூக விரோதி தகுந்த தரவுகள் தேவை உள் ஒதுக்கீடுக்கு அதற்க்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக அவசியம் .....ஒன்றியத்தை ஆளும் கட்சி மரம்வெட்டியின் கூட்டணி கட்சி தானே?? அங்கே தானே முட்டவேண்டும் ?? முறையிடவேண்டும் ?? அழுத்தம்தரவேண்டும் ?? அதைவிட்டுவிட்டு திமுக மீது பாய்வது சரியான செயலா ???


Senguraja
ஆக 02, 2024 09:40

உன்னை போல் கருங்காலி இருக்கும் வரையில் வன்னியர் வளர முடியாது. எதுக்கு நோட்டா . வன்னியரை இணைக்க பாடுபடேன்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை