உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 10ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜூலை 10ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி உயிரிழந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zs575tl5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேட்பு மனுத்தாக்கல் - ஜூன் 14ம் தேதி துவங்கும். வேட்பு மனுவை தாக்கல் செய்ய, ஜூன் 21ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - ஜூன் 24ம் தேதி. வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள்- ஜூன் 26ம் தேதி.

ஓட்டு எண்ணிக்கை எப்போது?

ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல். இடைத்தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

விக்கிரவாண்டியில் யாருக்கு பலம்!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில், லோக்சபா தேர்தலில் கட்சிகள் வாங்கிய ஓட்டு விவரம் வி.சி.க., - 72,188 அ.தி.மு.க.,- 65,365 பா.ம.க., - 32,198நாம் தமிழர் - 8,352


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SATHIK BASHA
ஜூன் 10, 2024 14:26

நாகப்பட்டிணத்திற்குத் தான் முடிஞ்சிடுச்சே?


Shankar
ஜூன் 10, 2024 23:28

pattali makkal katchi


Vijay D Ratnam
ஜூன் 10, 2024 14:13

எதுக்கு போட்டு உருட்டிக்கிட்டு, அப்படியே எடுத்துக்க வேண்டியதுதானே. அமித்ஷாவுக்கும் ஸ்டாலினுக்கும் பக்காவாக டீலிங் இருக்குது பாஸ். கொள்ளையடிச்சா கெட்டவன். கொள்ளைக் கூட்டத்திடம் கமிஷன் புடுங்குனா கெட்டவன் இல்லை. ஒரு பக்கம் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவார். மேற்படியான் டீலிங் பேசுவார். அதுக்கு பிறகு ஒருத்தனும் வாயை தொறக்கமாட்டான். டிஎம்கே பைல்ஸ் 1. 2. 3. வெளியிட்டங்களே. ஏதாவது அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இருந்தததா. கெஜ்ரிவாலை தூக்கி திஹார்ல வச்சாங்களே. குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்டாலினின் அல்லக்கை பொன்முடியை கைது செய்ய முடிந்தததா. கனிமொழி, ஆண்டிமுத்து ராசா, தயாநிதி மாறன், கார்த்திக் சிதம்பரம் ஜெகத்ரட்சகன் டி.ஆர்.பாலுவையெல்லாம் ஜெயில்ல வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. உதயநிதி சபரீசனையெல்லாம் நெருங்கினா நடுத்தெருவில் ஓடவிட்டுடுவாய்ங்க. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏற்றி பற்றியெல்லாம் திமுகவுக்கு கவலையே இல்லை. அமித்ஷா பாத்துப்பாரு. திமுகவை எதிர்த்து அதிமுக நிற்கும். பாஜக பாமக கூட்டணி ஓட்டை பிரிக்கும் அதிமுக தோற்கும். உன்னதமான உத்தமமான ஆட்சியை கொடுத்துக் கொண்டு இருக்கும் திமுக ஜெயிக்கும்.


வேங்கையன்
ஜூன் 10, 2024 14:02

அப்போ நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி ?


RAAJ68
ஜூன் 10, 2024 13:42

எதற்கு வீணாக தேர்தல் செலவு எப்படி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கப் போகிறது அடாவடி செய்து ஜெயித்து விடுவார்கள் எனவே தேர்தல் வேண்டாம் திமுக சார்பில் யார் போட்டியிடுவாரோ அவர் ஜெயித்து விட்டார் என்று அறிவித்து விடுங்கள்


K.Ramachandran
ஜூன் 10, 2024 12:56

கூட்டணிகள் தொடருமா இல்லையா என்று கவனிக்கணும்


ஆரூர் ரங்
ஜூன் 10, 2024 12:40

விடியலின் கியாரண்டி கார்டு ஜாக்கிரதை. ஒத்த பைசா கூட வராது.


sethu
ஜூன் 10, 2024 12:37

திமுக பதவியில் இருக்கும் வரை எந்த தேர்தலும் உண்மையாக நடக்காது அதனால இடைத்தேர்தல் வேண்டாம் அல்லது திமுக விற்கு இலவசமாக ஒத்துக்கிடலாம் பணம் செலவே இருக்காது


தத்வமசி
ஜூன் 10, 2024 12:35

எல்லாம் தமாசு...


Velan Iyengaar
ஜூன் 10, 2024 13:49

இந்த தளமே ஒரு தமாசு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ