உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி

சென்னை:'பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, தொழில் துறையினரின் பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயம்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுதும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உட்பட, 500 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டு; பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறது.இந்த மாணவர்கள் படிப்பை முடித்ததும், எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பயிற்சியை வழங்க, நான் முதல்வன் திட்டத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பாலிடெக்னிக் மாணவர்கள் தங்களின் படிப்பை முடிக்கும் முன், தொழில் துறையினரின் பயிற்சிகளை பெற வேண்டியது கட்டாயம். இதற்காக, ஐந்தாவது செமஸ்டரில் அனைத்து கல்லுாரிகளும், தொழில் துறையினருடன் இணைந்து, மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சி நிறைவில் மதிப்பெண் வழங்கி, அதை செமஸ்டர் தேர்வு மதிப்பெண் பட்டியலுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை