உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுயநலத்துடன் ஓட்டு பதிவு செய்யுங்க! பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேச்சு

சுயநலத்துடன் ஓட்டு பதிவு செய்யுங்க! பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை;''கோவையில், அண்ணாமலை எம்.பி., ஆக தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்,'' என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.தி வெராண்டா கிளப் மற்றும் திங்கர்ஸ் செல் அமைப்பு சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, 'ஸ்பாட் லைட்' நிகழ்வு நேற்று, கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது. இதில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, இளம் வாக்காளர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.

இதில், அவர் பேசியதாவது:

ஓட்டு போடாமல் தவிர்க்க, உங்களுக்கு 'சாய்ஸ்' இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து, நீங்கள் தப்ப இயலாது. ஓட்டு போடாமல் தவிர்ப்பதும், தவறான அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதும், உங்கள் எதிர்காலத்தை பாதித்துவிடும்.பெட்ரோல், கல்வி, மருத்துவம், விளையாட்டு, நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தும், நல்ல தலைவரை தேர்வு செய்வதில்தான் உள்ளது. மத்தியில் ஒரு ஆட்சியும், மாநிலத்தில் ஒரு ஆட்சியும் இருப்பதால், பல திட்டங்கள் இங்கு வந்து சேர்வதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், பெங்களூரின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்காக மத்திய அரசு சார்பில், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் மலிவு விலை மருந்தகங்கள் 132 உள்ளன. 2014ல் மெட்ரோ லைன் 7 கி.மீ., ஆக இருந்தது; தற்போது, 78 கி.மீ., ஆக உள்ளது. இதுபோன்ற பல திட்டங்கள், பெங்களூருவில் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசு ஒரே தரப்பினர் ஆட்சியில் இருக்கும் இடங்களில், சிறப்பாக உள்ளன.

எதிர்காலம் சிறப்பாக அமையும்

கோவையில், அண்ணாமலை எம்.பி., ஆக தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். திராவிட கட்சிகள் இந்தியாவை, வடக்கு, தெற்கு என பல பாகுபாடுகளை வைத்து பிரித்து ஆள நினைக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், ஊழல் இல்லாத ஆட்சியை, பா.ஜ., கட்சி, மோடியின் தலைமையில் வழங்கியுள்ளது.தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அச்சாரமிடுவதே, தி.மு.க., கட்சிதான். இளைஞர்கள், மக்களை பற்றி அவர்களுக்கு, எவ்வித கவலையும் இல்லை. எதிர்வரும் தேர்தலில் அவர்களை நிராகரித்து, தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, உதயநிதி போன்று கோடிக்கணக்கில் ஊழல் செய்து பதுக்கிய பணத்தை வாரி இறைத்து, பதவி வாங்கித்தரும் தந்தை இல்லை. தி.மு.க., கட்சி தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானது.லோக்சபா தேர்தலில், மோடி பதவியேற்க வேண்டும், அண்ணாமலை எம்.பி., ஆக வேண்டும் என்று, நீங்கள் ஓட்டு அளிக்க வேண்டாம். உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்; தகுதியான நபர்கள் தலைவர்களாக வேண்டும் என்ற சுயநலத்துடன், ஓட்டு போடுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.இளம் வாக்காளர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில், 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிகழ்வில், திங்கர்ஸ் செல் மாநில தலைவர் செல்வி தாமோதர், தி வெராண்டா அமைப்பின் நிர்வாகி ஷெபாலி வைத்தியா, திங்கர்ஸ் செல் மாநில துணைத்தலைவர் சங்கர்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A1Suresh
ஏப் 13, 2024 10:06

திருதேஜஸ்வி சூர்யா அவர்களின் பேச்சை ஒருவர் மொழிபெயர்த்து தந்திருந்தால் ஆங்கிலம் தெரியாத பாமரர்களுக்கு அது பெரும் உதவியாக இருந்திருக்கும் மிக அருமையான வாய்ப்பு பறிபோனதை எண்ணி வருந்துகிறேன்


A1Suresh
ஏப் 13, 2024 10:03

மாண்புமிகு திருவாளர் தேஜஸ்வி சூர்யா எம்பி அவர்கள் ஒரு இங்கிலாந்தில் பிறந்த அல்லது அமெரிக்காவில் பிறந்தவர் போல ஸ்போக்கன் ஆங்கிலச் சொற்களை அழகாக, இயல்பாக பயன்படுத்திப் பேசினார் இவ்விதமான் சொற்களை இங்கிலீஷ் பிரேசஸ் என்பர் தமிழில் இவைகளை கூட்டுவினைச் சொற்கள் என்னலாம் உதாரணமாக திருமங்கையாழ்வார் பாசுரங்களில் ஆயிரக்கணக்கில் இவ்வித சொற்கள் காணப்பெறும் அவர் பேசப்பேச புளங்காங்கிதம் அடைந்தேன்


A1Suresh
ஏப் 13, 2024 09:55

அவர் ஆங்கிலத்தில் மிக அழகாகப் பேசினார் உதாரணமாக % மானிய விலையில் மருந்துகள் கிடைக்கும் அரசினர் பார்மசி கடைகள் பெங்களூரில் நூற்றுக்கும் மேற்பட்டு திறக்கப்பெற்றன


Kasimani Baskaran
ஏப் 13, 2024 06:10

தொடர்ந்து தீம்காவுக்கு ஓட்டுப்போட்டால் தீம்காவினர் நிழல் உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை