உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி நாங்கள் தான்: அனுராக் தாக்கூர் பெருமிதம்

வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி நாங்கள் தான்: அனுராக் தாக்கூர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி நாங்கள் தான்' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். தென்சென்னையில் ராஜஸ்தான் இளைஞர் அமைப்பின் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரி நடந்த கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என, மற்ற அரசியல் கட்சிகள் கடந்த 40 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்தும், யாரும் நிறைவேற்றவில்லை.பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது பா.ஜ.,வும், பிரதமர் நரேந்திர மோடியும் தான். வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி நாங்கள் தான். தமிழக இளைஞர்களை வளர்ப்பதற்கு பதிலாக, திமுக ஒரேயொரு நபரை வளர்க்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை