மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 4
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
1 hour(s) ago | 4
சென்னை:கடலுார் மாவட்டத்தில் போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்டோருக்கு, இறுதி இழப்பீடு வழங்குவது குறித்து, அரசின் நிலையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடலுார் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகண்ணு. இவரை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, கணவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, அவரது மனைவி பார்வதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், போலீசாரின் சித்திரவதையால் ராஜகண்ணு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கடந்த 1993ம் ஆண்டில் நடந்தது. வழக்கு பதிவு
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், போலீசாருக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, இடைக்கால இழப்பீடாக பார்வதிக்கு 1.35 லட்சம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50,000 ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25,000 ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்ளிட்ட 5 பேருக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்பட்டது.இந்நிலையில், போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, குளஞ்சியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தன் மகனுக்கு அரசு வேலை, வீட்டுமனை மற்றும் உதவிகள் வழங்கும் படி கோரியிருந்தார். ஒத்திவைப்பு
இந்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இறுதி இழப்பீடு மற்றும் உதவிகள் வழங்குவது குறித்து, அரசின் நிலையை தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி ஜெயசந்திரன், விசாரணையை வரும் 23க்கு ஒத்தி வைத்தார்.ராஜகண்ணு மரணம் தொடர்பாக நீதி கேட்டு, அவரது மனைவி பார்வதி நடத்திய சட்டப் பேராட்டத்தை அடிப்படையாக வைத்து தான், நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
1 hour(s) ago | 4
1 hour(s) ago | 4