| ADDED : ஏப் 02, 2024 10:18 PM
சென்னை:மாவட்ட விளையாட்டு மைதானங்களில், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் வாயிலாக, கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படும். இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த முகாமில், ஒவ்வொரு மாவட்டத்திலும், விளையாட்டு திறமையுள்ள பள்ளி மாணவர்கள், 200 பேர் வரை தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுவர்.அவர்களுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில், 2.30 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப் பந்து, ஹாக்கி, கபடி, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். வழக்கமாக இதில் சேருவதற்கான விண்ணப்பங்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கப்படும்.ஆனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இதனால், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.