உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த பாட திட்டம் சிறப்பானது?

எந்த பாட திட்டம் சிறப்பானது?

8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது பாடம் படிக்க தெரியலை

சென்னை:''புதிய தேசிய கல்விக் கொள்கையின், 'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தால், மாணவர்களின் தரம் மேம்படும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.தமிழக கவர்னர் ரவி, 300 ஆசிரியர்களுடன் கலந்துரையாடும், 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து, கவர்னர் ரவி பேசியதாவது:சுதந்திரத்துக்கு முன், நம் பொருளாதாரமும், கல்வியும் சிறப்பாக இருந்தது. மாணவர்கள் குருகுல வழியில், ஆசிரியர்களிடம் இருந்து வாழ்வியலோடு சேர்ந்த கல்வியை கற்றனர். அவர்களின் வாழ்வில், சமூகப்பணி இணைந்தே இருந்தது. அவர்களும் சமூகப்பொறுப்புடன் இருந்ததால், சமூகம் அவர்களுடன் இருந்தது.தற்போதைய கல்வியில், சமூகப்பணி என்பது மேற்கத்திய கலாசாரம் போல, ஒரு நாள் பணியாக கற்பிக்கப்படுகிறது. நம் கல்வித்தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, நாடு முழுதும் உள்ள வல்லுனர்கள் கூடி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கினர். இதில், கல்வித்தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றன. சில மாநிலங்கள் மறுத்துள்ளன. தமிழகம் முதலில் ஏற்பதாக கையெழுத்திட்டது. தற்போது, அதில் உள்ள பலவற்றை ஏற்கமாட்டோம் என்கிறது.பொதுவாக, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக, மேல்நிலை பள்ளிகளில், தரம் வாய்ந்த ஆய்வகங்களை கட்டமைக்க, மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதை பெற்ற மாநிலங்கள், மாணவர்களின் தரத்தை மேம்படுத்தி உள்ளன.தமிழக கிராமங்களிலும் கல்வியை வளர்க்க, முன்னாள் முதல்வர் காமராஜர் அரசு பள்ளிகளை அதிகப்படுத்தினார். தற்போது, கல்வியின் இன்ஜின் எனக்கூறும் தமிழக அரசு பள்ளிகளில் 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க, இரண்டிலக்க எண்களை அறிய முடியவில்லை. இதை மேம்படுத்தாவிட்டால், கல்வித்தரத்தை நாம் இழந்து விடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

வயிற்றெச்சல் பிடித்தவர்கள் வம்படியாக பேசுகின்றனர்

சென்னை, செப். 6-''தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்த சிலர், தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர்,'' என, கவர்னர் ரவியை மறைமுகமாக தாக்கி, அமைச்சர் உதயநிதி பேசினார்.சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது:'தமிகழத்தின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை' என, சிலர் அவதுாறு கிளப்புகின்றனர். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர், அரசு பள்ளியில் படித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளாகி உள்ளனர். அரசு பள்ளியில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதை பிடிக்காத, வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுகின்றனர். வம்படியாக பேச வேண்டும் என்பதற்காவே இப்படியெல்லாம் பேசுகின்றனர்.தமிழகத்தின் பாடத்திட்டத்தை குறை கூறுவது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம். இதற்கு முதல்வர் எந்த காலத்திலும் இடம் கொடுக்க மாட்டார்.புதிய கல்விக் கொள்கையை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, தரம் மிகுந்த மாநில கல்வித் திட்டத்தின் பாடத்தை குறை கூறுகின்றனர். இதற்கு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில் சொல்லி விட்டார். நூலகம் தோறும் சென்று பாருங்கள்; அங்கிருக்கும் மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தைத் தான் போட்டித் தேர்வுக்காக படிக்கின்றனர் என்பதை. தேவையானால், மாநில கல்வித் திட்ட பாடத்தை குறை கூறுகிறவர்கள், இந்த உண்மையை நேரடியாக சென்றும் அறியலாம்.இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sridhar
செப் 06, 2024 13:12

எப்பப்பாத்தாலும் சுந்தர் பிச்சை சிவன்னு தூக்கிட்டு வந்துருவானுங்க. அதுலகூட சுந்தர் CBSE ல படிச்சவருங்கற விவரம் இவனுகளுக்கு தெரியாது. விஷயம் என்னென்னா, இப்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையும் நட்சத்திரங்கள், தேசிய கல்வி கொள்கை அமலுக்கு வந்தால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்பதே இப்போ நீட் தேர்வுக்கப்புறம் எப்படி ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயிலமுடியுது, அதுபோல அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு பாடப்புத்தகத்தில் ஊழல் செஞ்சவனை பத்தியும் ஆபாசமா பேசியவன் பத்தியும் பெருமையா போட்டு அவுங்க மனசுல விசத்தை விதைச்சா, அந்த தலைமுறையே கெட்டு குட்டிசுவரா போயிரும். ஆனா, இந்த திராவிடியா பசங்களுக்கு அதிலெல்லாம் எது அக்கறை? அவனுக நடத்துற தனியார் பள்ளிகளின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது, அவ்வளவுதான்


AMLA ASOKAN
செப் 06, 2024 09:04

வேறு எந்த மாநில ஆளுநரும் இவர் போல் நடைபெறும் ஆட்சியை பற்றி தேவையில்லாமல் குறை கூறுவதில்லை . இவர் வம்பை விலைக்கு வாங்கும் விருப்பமுள்ளவர் . அன்று முதல் இன்று வரை தமிழக மாணவர்கள் மிக சிறப்பான பட்டங்களையும் உலகமுழுவதும் பதவிகளையும் பெற்று வந்துள்ளனர் . காலப்போக்கில் மாணவர்களின் கவணங்கள் சிதைந்து வருவது அவர் அவரது தலையெழுத்து .


M S RAGHUNATHAN
செப் 06, 2024 07:44

திரு உதயநிதி விளையாட்டு துறை அமைச்சர். எதையும் விளையாட்டாக பேசுகிறார். 50 வருடங்களுக்கு முன் இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கு இருந்த கடமை, அர்ப்பணிப்பு இப்போது அதே அளவு இருக்கிறதா? மேலும் உதயநிதி குறிப்பிட்ட பெரு மக்கள் படித்தபோது ஆங்கில வழி கல்வி அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிடையாது. CBSE பள்ளிகள் நகரங்களில் தான் இருந்தன. முற்றுமே தனியார் நடத்தும்.பள்ளிகள் அப்போது கிடையாது. அரை குறை அறிவுடன் பேசுவது ஆபத்து. அரசு உதவி பெறும் பள்ளிகள் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட trust, உள்ளூர் பெருமக்களால் நடத்தப் பட்டது. கட்சி சாயம், மத சாயம் சாதி சாயம்.இன்றி நடத்தப் பட்டது. ஆசிரியர்கள் ஒழுக்கம் கேள்வி கேட்கப் பட்டதில்லை. ஆசிரியர்கள் ஒழுங்கீன மாணவனை தண்டித்தால், அவர் பணி இடை நீக்கம் செய்யப் பட்டதில்லை. தங்கம் நல்ல ஆபரண நகை ஆக வேண்டும் என்றால் தட்டி, நெருப்பில் காட்டி தான்.செய்வார்கள். அதற்கு ஆபரணம் செய்யும். தச்சர்களை குறை சொல்வார்களா ? ஆங்கில பழ மொழி Spare the rod and spoil the child நினைவு கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆசிரியரும் தன் மாணவன் கெட்டுப் போவதை விரும்புவது இல்லை. ஆசிரியர்களும் தங்கள் முக்கிய கடமை சிறப்பாக கற்பித்தல் என்பதை நினைவு கொள்ளவேண்டும். அவர்களுக்கு உதய நிதி போன்றவர்கள் ஆலோசனை செய்வது தேவை இல்லாதது


M S RAGHUNATHAN
செப் 06, 2024 07:20

ஒரு திரைப் பட பாடல்.நினைவிற்கு வருகிறது. " எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்க்கையிலே". அதுபோன்று எந்த பாட திட்டமும் நல்லது தான். .ஆனால் அது வெற்றி பெறவேண்டும் என்றால் அதை சிறப்பாக கற்பித்ததிலும் நன்றாக கற்றுக் கொள்வதிலும் இருக்கிறது. பாட திட்டம் கீழ்நிலையில் ஆழமாக இருக்க வேண்டும். அகலமாக இருக்கக் கூடாது. The tem should be Deep and not shallow. If the foundation is strong, the building will be strong and safe, and if not ......வடிவேலு சொன்னது தான். பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்


T.sthivinayagam
செப் 06, 2024 05:43

கவர்னர் அவர்கள் ஏன் ஆங்கிலத்திலே பேசுகிறார் இவர்தாய்மொழியில் அல்லது ஹிந்தியில் பேசலாமே ஆங்கிலேயர் பெயர்உள்ள கட்டடம் சட்டம் பிடிக்காது ஆனால் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்துவார் என மக்கள் கேன்கின்றனர்


M S RAGHUNATHAN
செப் 06, 2024 07:12

இது விதண்டா வாதம்


புதிய வீடியோ