உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்?: தூத்துக்குடி பிரசாரத்தில் சீமான் கேள்வி

துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்?: தூத்துக்குடி பிரசாரத்தில் சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சொன்னது யார்? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடியில் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடுகிறேன். குறைந்த ஓட்டு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள். தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த சொன்னது யார்? . அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை. ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து குரல் கொடுத்தேன். லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 31, 2024 12:27

Pollution பிரச்சினைக்காக தொழிற்சாலைகளை மூடுவது தான் தீர்வு என்றால் எந்த தொழிற்சாலையும் இயங்க முடியாது லஞ்சம் வாங்காமல் Pollution Control Board அரசும் தொழிற்சாலைகளை பார்த்தால் Pollution பிரச்சினை வராது மக்களும் எந்த பாதிப்பும் இருக்காது இப்படி தான் சபதம் போட்டு கோவையில் South India Viscose நிறுவனத்தை திமுக மூடியது எல்லா தொழிற்சாலைகளிலும் ஏதாவது ஒரு Pollution problem இருக்கத்தான் செய்யும்


என்றும் இந்தியன்
மார் 30, 2024 19:09

சீமான் தான்


Godfather_Senior
மார் 30, 2024 17:28

It would be fine if your candidates get back their security deposits You, Thirumaa and EPS are the B, C & D teams of the DMK


GMM
மார் 30, 2024 15:44

கலவர கூட்டம் கூட்டியது யார்? கலவரத்தின் ஆணி வேர் யார்? வன் கொடை வரும்போது, நிறுவன நன்கொடை எதற்கு?


ஆரூர் ரங்
மார் 30, 2024 15:30

அறவழி எது? கலெக்டர் அலுவலகத்தைத் தாக்கியவர்களா? தீ வைத்தவர்களா?


vijay s
மார் 30, 2024 18:52

கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர்


Rama adhavan
மார் 30, 2024 15:03

இவரது பேச்சு பயனற்றதாக போல் உள்ளது. இதுவா இவரது ஜனநாயக கடமை? இவரது கட்சி எப்படி வளரும்?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி