உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ஏன் கட்சிக்கு மூன்றாமிடம்? செல்லுார் ராஜுவிடம் பழனிசாமி கேள்வி..

மதுரையில் ஏன் கட்சிக்கு மூன்றாமிடம்? செல்லுார் ராஜுவிடம் பழனிசாமி கேள்வி..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தயாராக வேண்டும்' என, கட்சியினருக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, சட்டசபை தொகுதிவாரியாக, அ.தி.மு.க.,வில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, சிதம்பரம், மதுரை, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளுக்கான கூட்டம் நடந்தது.சிதம்பரம் தொகுதி கூட்டத்தில், சில நிர்வாகிகள் பேசும்போது, 'பா.ம.க.,வுடன் இனி கூட்டணி வேண்டாம். அக்கட்சியால் நமக்கு பலனில்லை.

தயாராக வேண்டும்

அவர்களை தவிர்த்து, நம் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 'வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைப்போம். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு, அனைவரும் தயாராக வேண்டும்' எனக் கூறியுள்ளார்.மதுரை தொகுதிக்கான கூட்டத்தில், மாவட்டச் செயலர்கள் செல்லுார் ராஜு, ராஜன் செல்லப்பா, வேட்பாளர் சரவணன் ஆகியோர் பேசி உள்ளனர். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம், 'அ.தி.மு.க., ஆட்சியில் மதுரை மாவட்டத்திற்கு மட்டும், 8,000 கோடி ரூபாய்க்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அப்படி இருந்தும், தேர்தலில் நாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். சாதனைகளைக் கூறி ஏன் ஓட்டுகளை பெறவில்லை' என, பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கூடுதல் சாதகம்

அவர் பதில் அளிக்க, செல்லுார் ராஜுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. புகார் சொன்ன பழனிசாமியே, 'சரி சரி, நடந்ததை மறந்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறப் பாருங்கள்' எனக் கூறி, அடுத்த கருத்துக்குப் போய் இருக்கிறார். இதனால், செல்லுார் ராஜூ செய்வதறியாது திகைத்துள்ளார். கூட்டத்தில் சிலர் பேசுகையில், 'இரண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்டச் செயலரை நியமிக்க வேண்டும். 'பூத்' கமிட்டியை பலப்படுத்த வேண்டும். பா.ஜ., கூட்டணியால் பாதகம் கொஞ்சம் இருந்தாலும், சாதகம் கூடுதலாகவே உள்ளது. கூட்டணி இல்லாததால், அனைத்து தரப்பு மக்களையும் அணுக முடிந்தது. அதேநேரம் கூட்டணி இருந்திருந்தால், 15 தொகுதிகள் வரை நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.அதற்கு பதில் அளித்த பழனிசாமி, 'நடந்து முடிந்தது லோக்சபா தேர்தல் என்பதை கட்சியினர் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடிக்காக தேர்தலில் மக்கள் ஓட்டளித்தனர். சட்டசபை தேர்தலில் அப்படி ஓட்டளிக்க வாய்ப்பில்லை. எனவே, கடந்த தேர்தலில் கிடைத்த தோல்விக்காக யாரும் வருந்த வேண்டாம். வரும் சட்ட சபை தேர்தலில் நமக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெற்றி உறுதி

லோக்சபா தேர்தலில் தோல்வி என்றாலும், நம்முடைய ஓட்டு சதவீதம் அப்படியே உள்ளது. அதனால், வரும் சட்டசபை தேர்தலை நோக்கி இன்னும் வேகமாக கட்சியினர் அனைவரும் பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால், வெற்றி பெறுவது உறுதி. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் துணை இல்லாமல் தான், லோக்சபா தேர்தலில், நமக்கான ஓட்டுகளை குறைவில்லாமல் அப்படியே பெற்றிருக்கிறோம். அதனால், கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பளிக்க முடியாது. அப்படியொரு சிந்தனை நம் கட்சியினருக்கு இருந்தால், முதலில் அதில் இருந்து மீண்டுவர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V RAMASWAMY
ஜூலை 14, 2024 20:07

இனி வரும் தேர்தல்களில், தேர்தல் தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாகவே, மாநில, மத்திய அரசுகள் ராஜினாமா செய்து, அந்தக்காலத்தில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமல் மக்கள் பணத்திலிலிருந்து எந்த செலவும் செய்யாமல் தடை செய்யவேண்டும்.


veeramani
ஜூலை 14, 2024 09:38

உலக நாடுகளில் கூட்டணி இல்லாமல் எவரும் சாதனைகளை செய்ய இயலாது இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பது இனிமேல் நடக்கும் என்பது நிதர்சனம் இந்திய கூட்டணி ஓரளவிற்கு சாதித்துள்ளதுற்கு இதுவே காரணம் மத்தியில் மதிப்பிற்குரிய மோடி ஜி அரசும் கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறது எனவே எம் ஜி ஆர் துவங்கிய கட்சி கூட்டணி பற்றி சிந்தித்து முடுவு எடுக்கவேண்டும். ஆ தி மு க இனிமேல் தனி ஆவர்த்தனம் செய்ய முடியா து


vadivelu
ஜூலை 14, 2024 13:46

அண்ணா தி மு க இப்போது தமிழக காங்கிரஸ் கட்சி போல ஆகி விட்டது. சில தொகுதிகளில் அதற்க்கு சாதி வாக்குகள் இருக்கின்றது அவ்வளவே. இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும், தலித்துகளும் இனி எப்போதுமே அவர்களுக்கு வாக்களிக்க மாட்டர்கள்.


kskme
ஜூலை 14, 2024 09:29

இருக்கின்ற இடம் தெரியாமல் போகப் போகின்றது இனி வரும் காலங்களில் மூன்றாவது இடமாம் மூன்றாவது இடம்.


Duruvesan
ஜூலை 14, 2024 08:30

பாஸ் விடியலின் கட்டளை படி தனித்து நில்லு, விடியலு 234 ஜெயிக்கணும்


VENKATASUBRAMANIAN
ஜூலை 14, 2024 08:09

எடப்பாடி தவறு செய்கிறார். ஈகோ அவரை அப்படி தூண்டுகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல


SP
ஜூலை 14, 2024 08:03

இந்த தலை தொடர்ந்தால் மதுரையில் மட்டுமல்ல மொத்த தமிழகத்திலும் இதுதான் நிலைமை. விரைவில் உணர்வீர்கள்


GMM
ஜூலை 14, 2024 07:55

பிஜேபி கூட்டணியில் கட்சிக்கு பாதகம் குறைவு. சாதகம் அதிகம். பழனிக்கு திமுக நிழல் உறவில் சாதகம் அதிகம். பாதகம் குறைவு. அண்ணா திமுக ஓட்டு சதவீதம் அப்படியே இருந்தாலும், அதிக ஓட்டு தான் வெற்றியை தீர்மானிக்கும். இது கூட தெரியாமல் எடப்பாடி மூளை சலவை செய்கிறார். நாம் தமிழர் கட்சி போன்று தனித்து நின்று அழிய வேண்டியது தான். தேர்தல் ஆணையம் கூட்டணி முறையை தடை செய்யும் வரை கூட்டணி அவசியம். திமுக கட்சி தாவிய செந்திலை பாலாஜியை காக்க விரும்பவில்லை. தன் பொன்முடியை காத்து, பதவியை பெற்று தந்தது. துரை முருகன் காக்கப்பட்டு வருகிறார்.


Durai Kuppusami
ஜூலை 14, 2024 07:26

எடப்பாடி அவர்கள் இன்று சந்தோஷமாக இருப்பார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிற்காமல் செய்து விடு.அம்மாவை காரணம் காட்டாதே. அவர் கால்தூசிக்கு கூட ஈடாக மாட்டாய். உன்கிட்ட கட்சி மாட்டிக்கொண்டு அழிந்து வருகிறது . வீண் சவடால் வேண்டாம். பலமான கூட்டணி அமைப்பாராம். தெரு முனையில் நின்று கூப்பாடு போடு. அடுத்த தேர்தல் அமோகமாக வெற்றி பெறும் நீயெல்லாம் ஒரு தலைவன் நீ வந்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.இப்டியே பேசி வீண் சவடால் அடிக்காத. தலைவர் கட்சி ஆரம்பித்த போது அன்று முதல் கட்சியின் விசுவாசியாக இருந்து வருகிறேன். உன் நடவடிக்கையால் மனசு வலிக்கிறது. கட்சியில் பெறும் குழப்பம் வர காரணம் நீயாகத்தான் இருப்பாய் சசிகலாவை கூட நம்பலாம்.உன்னை நம்ப முடியாது அவனவன் கட்சி கட்டுப்பாடு இல்லாமல் பேசுகிறான் இதையெல்லாம் அடக்க உனக்கு துப்பு இல்லை.கட்சி மேலும் மேலும் அழிவதற்கு வித்திடுகின்றாய்.வாய் சவடால் போடாமல் பக்கத்தில் பல அல்லக்கைகளை வைத்து கொண்டு தலைவருக்கும் அம்மாவிற்கும் பெறும் துரோகத்தை செய்யாதே.முடியாவிட்டால் பதவியை விட்டு ஓடிவிடும்......


ராமகிருஷ்ணன்
ஜூலை 14, 2024 07:26

எடப்பாடி, ஜெயக்குமார், ராஜு போன்றோர்களின் மமதை, அறியாமை, கூட்டணி பேச திறமையின்மை, நிகழ்கால மக்களின் மனதை அறியாமை, ஆட்சியில் இருந்த போது செய்த தவறுகள். இவையெல்லாம் அதிமுக கட்சியை அழித்து கொண்டுள்ளது. திருடர் கூட்டம் திமுகவை வாழ வைத்துக் கொண்டு உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டுகளவாணிகள் தான். தமிழகத்திற்கு விடிவு எப்ப யாரால் வரும்.


Rpalnivelu
ஜூலை 14, 2024 15:24

பாஜகவின் அற்புத தலைவர் அண்ணாமலையால் மட்டுமே


N.Purushothaman
ஜூலை 14, 2024 06:47

செல்லாக்காசு ராஜு என்ன சொல்லுவார் ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ