உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியா?: அன்புமணி பதில்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியா?: அன்புமணி பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடுவது பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்' என அக்கட்சி தலைவர் அன்புமணி கூறினார்.விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. திண்டிவனத்தில் நிருபர்கள் சந்திப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுமா? என அன்புமணியிடம் கேள்வி எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n1ko0mbj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு ‛‛ பா.ம.க., போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும். பா.ம.க., நிர்வாகிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது'' என அன்புமணி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஜூன் 13, 2024 22:22

தி. மு. க நின்றால் திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்துவார்கள், பிஜேபி நின்றால் சூரத் பார்முலாவை செயல்படுத்துவார்கள்


Vijay D Ratnam
ஜூன் 13, 2024 21:09

எதுக்கு உருட்டிக்கிட்டு அப்டியே எடுத்துக்க வேண்டியதுதானே.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 16:42

பணபலம் விளையாடும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பது நல்லது. . ஐயாயிரம் பத்தாயிரம் எதிர்ப்பார்க்கும் குடிமகன்கள் ஏமாறட்டும்.


Bala
ஜூன் 13, 2024 16:17

சீக்கிரம் முடிவு பண்ணி பிரச்சாரத்தை ஆரம்பிச்சு 30% ஓட்டுக்களை பெற முயற்சி செய்யுங்கள்.


Palanisamy Sekar
ஜூன் 13, 2024 15:48

எடப்பாடி இல்லாத அதிமுக இருக்குமே என்றால் அதிமுக பாஜக பாமக கூட்டணி மிகப்பலம் வாய்ந்த கூட்டணியாக தமிழகத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. எடப்பாடி ஸ்டாலினின் சேவகம் செய்கின்ற கொடநாடு வழக்கு, சம்பந்தியின் சொத்து சேர்ப்பு வழக்கு என்று பயந்துபோய் பாஜக கூட்டணியை விட்டு வெளியேற வைத்தார் ஸ்டாலின். இல்லையேல் வழக்கு விசாரணை ஆரம்பமாகும் என்கிற பயத்தில்தான் எடப்பாடி கூட்டணியை தவிர்த்தார். பாஜக தலைமை எடப்பாடி இல்லாத அதிமுகவை சிறகடிக்க வைக்க செய்திடவேண்டும். பின்னர் பாஜக அதிமுக பாமக கூட்டணி தமிழகத்தில் நிரந்தர செல்வாக்கோடு தமிழகத்தை ஆளும்.


Anbuselvan
ஜூன் 13, 2024 15:08

NDA கூட்டணி பாமகவுக்கு இந்த தொகுதியை கொடுத்தால் அவர்களது 19% கூற்று ஊர்ஜித படுத்த வாய்ப்பு உள்ளது. இதை விட மேலாக அதிமுகவிற்கு ஆதரவு கொடுத்தால், ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் அது.


vadivelu
ஜூன் 13, 2024 17:09

அ தி மு க இனி தி மு க கூட்டணி வேட்பாளரை தோற்கடிப்பது என்பது கனவில் மட்டுமே. அவர்களுக்கு மைனாரிட்டி மக்களின் வாக்குகளில் இரண்டு விழுக்காடு கூட கிடைக்காது. பாஜக உடன் கூட்டணி வைத்தால் ஒரு பத்து விழுக்காடு வாக்குகளை கூடுதலாக பெற வாய்ப்பு உண்டு. இல்லையேல் கொடுத்த .... பெட்டியை வாங்கி கொண்டு ஒப்புக்கு சப்பாணியாக காலத்தில் நிற்க வேண்டியதுதான்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ