உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?: முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?: முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'டேக்' செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024இல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=voi7ukoz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Mani . V
ஜூலை 22, 2024 04:51

நாங்கள் போதிய அளவு ஊழல் செய்ய மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா?


xyzabc
ஜூலை 21, 2024 23:30

எவ்வளவு நிதி கொடுத்தாலும் அது எங்கே போகிறது ? சொல்ல முடியுமா ? DMK அரசால். எதற்கு இந்த வெறும் buildup ?


RAAJ68
ஜூலை 21, 2024 20:09

உலகத்துக்கே பட்ஜெட் போடும் அளவுக்கு உங்களிடம் நிதி உள்ளது. பழனிவேல் ராஜன் என்ன சொன்னார் 30 ஆயிரம் கோடி ஒரே வருடத்தில் கொள்ளையடித்ததாக இப்போது மூன்று வருடங்கள் ஆயிற்று 90 ஆயிரம் கோடி கொள்ளை அடித்திருப்பீர்கள் அப்புறம் உங்கள் திமுகவில் இருக்கும் ஒருவரே சொன்னார் துரைமுருகன் 60 ஆயிரம் கோடி மணலில் கொள்ளை அடித்துள்ளார் என்று அதற்கு மறுப்பு தெரிவித்து நீங்களும் அல்லது துரைமுருகனும் அறிக்கை விடவில்லை அப்படியானால் அது நிஜம். எனவே நீங்கள் கொள்ளையடித்த பணங்களை தமிழக கஜானாவில் செலுத்தி தமிழகத்திற்கு வேண்டிய நிதியை விடுவித்துக் கொள்ளலாம்.


vijai
ஜூலை 21, 2024 18:51

எதுக்கு நிதி யாருக்கு ?


Barakat Ali
ஜூலை 21, 2024 16:42

கள்ளச்சாராயம் குடிச்சு சாவுறவங்க எண்ணிக்கை இனிமே வருசா வருஷம் டபுள், ட்ரிப்பில் இப்படி ஆயிட்டே போவும் ... மாநிலம் திவால் ஆகுதேன்னு கவலைப்படாமல், ஓட்டுக்காகவே நாங்களும் பத்து பத்து லட்சமா குடுத்துக்கிட்டே போவோம் .... நாடு திவாலாவுதே ன்னு கவலைப்படாம ஆரிய ஒன்றியம் எங்களுக்கு அள்ளிஅள்ளி கொடுக்கணும் .....


Rajasekaran
ஜூலை 21, 2024 16:26

40/40 போட்ட தமிழ் க்களின் NILAIMAI


அருண், சென்னை
ஜூலை 21, 2024 15:17

யாருக்கு நிதி ஒதுக்குவது? கோபாலபுரதுக்குக்கா? இல்லை, கழகத்துக்கா?


A
ஜூலை 21, 2024 14:41

what to do? how do I know?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 21, 2024 14:25

அம்மா, தாயே, ஏதாவது போடுங்கம்மா... அம்மா, தாயே..


Kumar Kumzi
ஜூலை 21, 2024 13:32

ஹாஹாஹா குடிச்சி சாகுறவனுக்கு பத்து லட்சம் ஓவா கொடுக்கவும் கொள்ளை அடிக்கவும் தானே விடியாத விடியல்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை