உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திசையன்விளை அருகே ஆனைகுடியில் எலக்ட்ரிக் டூவீலர் பேட்டரி வெடித்ததில் காயமுற்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா 45, கோழிப்பண்ணையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் டூவீலர்கள் தோட்டத்தின் ஷெட்டில் நிறுத்தப்பட்டு இருந்தன. தோட்டத்தில் கோழி முட்டைகள் அடைகாக்க பயன்படும் இன்குபேட்டர் வைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு பைக்குகளின் பேட்டரிகளும் சார்ஜ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தன.பிப்.15 காலையில் அங்கு ஜான்சி பாப்பா சென்ற போது ஒரு பேட்டரி திடீரென வெடித்தது. இதில் அவர் படுகாயமுற்றார். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Masu R
பிப் 22, 2025 18:27

is it incubator battery or vehicle battery which exploded.


முக்கண்ணன்
பிப் 22, 2025 13:03

மக்களை பாதுகாக்க ஆப் களை முடக்கும் கோமாளிகள். பேட்டரி வெடிப்பெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.


Ramesh Sargam
பிப் 22, 2025 11:52

நான் சமீபத்தில் சீனா சென்றிருந்தேன். அங்கு எங்கு பார்த்தாலும் பாட்டரியால் இயங்கும் வாகனங்களே. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் அதிகம். அங்கு இதுபோன்று விபத்து ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நாம் அடிக்கடி சீனா பொருட்களை கிண்டல் செய்கிறோம். அவைகள் தரம் இல்லாதவை என்று. இந்தியாவில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. காரணம் என்னவென்று பாட்டரி தயாரிக்கும் வல்லுநர்கள் கண்டறிந்து, தரமான பாட்டரிகளை தயாரித்து, உயிர்பலியை தடுக்கவேண்டும், என்பது என் பணிவான கோரிக்கை.


Apposthalan samlin
பிப் 22, 2025 11:36

எந்த கம்பெனி ஸ்கூட்டர்? ஓலா ஸ்கூட்டர் அடிக்கடி பேட்டரி வெடிக்கும் .ஓலா சேப்டி கிடையாது வாங்குவதை தவிர்க்கலாம் .


Chidambarakrishnan K
பிப் 22, 2025 10:44

பேட்டரி வாகனங்கள் எப்போதுமே ஆபத்தானதுதான். அது காரக இருந்தாலும் சரி இரண்டு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி.


அப்பாவி
பிப் 22, 2025 09:48

ஏண்டா இத்தனை டெக்னாலஜி கண்டு பிடிக்குரவனுங்க பேட்டரி ஃபுல் ஆனா சார்ஜரில் மின்சாரம் கட் ஆவுறதுக்கு ஒண்ணும்.கண்டு பிடிக்க மாட்டீங்களா? நீங்க எங்கே கண்டுபிடிக்கிறீங்க? ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி கிட்டேருந்து டை அப் போட்டு கொணாந்து இறக்கி இங்கே துட்டு பாக்குறீங்க.


அதுல்யா
பிப் 22, 2025 06:50

இப்பல்லாம் வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட் ஆகத் தேவையில்லை. பாட்டரி தானாவே வெடிச்சி காலி பண்ணிரும். வல்லரசா முன்னேறிட்டோம்.


வாய்மையே வெல்லும்
பிப் 22, 2025 07:12

பேட்டரி வெடிச்சி வல்லரசு ஹாஹாஹா தீய மூர்க்கன் தென்பட்டால் அவனுக்கு முரசொலி பேப்பர்ல முக்கி எடுத்த மசால்வடை பார்சல் அனுப்பவும்.


vijai hindu
பிப் 22, 2025 08:02

கருத்து போடும் போது இது எதற்கு வல்லரசு நாட்டை பத்தி பேசுவது பேட்டரி பைக் முறையாக பராமரிக்க வேண்டும் சார்ஜ் போடும்போது காற்றோட்டமான இடத்தில் சார்ஜ் போட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை