உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் உலக ஹைக்கூ மாநாடு

மதுரையில் உலக ஹைக்கூ மாநாடு

சென்னை:தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு, ஜூன் 9ம் தேதி மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், இனிய நந்தவனம் இதழ் ஆகியவை இணைந்து, இரண்டு முறை தமிழ் ஹைக்கூ உலக மாநாடுகளை நடத்தி உள்ளன. இந்தாண்டு ஜூன் 9ம் தேதி, மதுரையில் மூன்றாவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாநாட்டின் ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் கூறியதாவது:மூன்று வரிகளில் முத்தான கருத்துகளை சொல்லும் கவிதை வடிவமான ஹைக்கூவை, தமிழில் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஹைக்கூ கவிதை கண்காட்சி, ஹைக்கூ நுால் வெளியீடு, ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகள், ஹைக்கூ வாசிப்பரங்கம், பகிர்வரங்கம், அயலக ஹைக்கூ அனுபவ அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை, மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அவ்வை அருள் துவக்கி வைக்க உள்ளார். சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்க விருப்பமுள்ளோர் 99407 81998, 94443 60421 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ