உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 100 கேமராக்கள் அவுட்

மதுரை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 100 கேமராக்கள் அவுட்

மதுரை : திடீர் இடி, மழையால் மதுரை தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதியில் இருந்த நுாறு கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.மதுரை மருத்துவ கல்லுாரியில் ஜூன் 4ல் மதுரை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தல் முடிந்ததும் 1573 ஓட்டுச்சாவடிகளில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாக்கப்படுகிறது. இந்த அறையின் ஒரு சாவி கருவூலத்திலும், மற்றொரு சாவி தேர்தல் அதிகாரியான கலெக்டர் வசமும் பாதுகாப்பாக உள்ளது.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங்க் ரூமில் மத்திய ரிசர்வ் படையினரும், அடுத்த வளையத்தில் தமிழக போலீசார், நுழைவு பகுதி உட்பட வெளிப்பகுதியிலும் நுாற்றுக்கணக்கான போலீசார் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசியல் கட்சியினரும் மூன்று ஷிட்டுகளில் கண்காணிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பிரத்யேகமாக டிவிக்கள் நிறுவப்பட்டுள்ளன. எந்நேரமும் குறைந்தது 10 பேராவது இருந்து கண்காணிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக 260 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன்கூடிய மழை பெய்தது. இந்த அதிர்வால் நுழைவிடம், வெளிப்பகுதியில் இருந்த 150 கேமராக்களில் நுாறு கேமராக்கள் வரை செயலிழந்தன. உடனே கலெக்டர் உட்பட தேர்தல் அதிகாரிகள் தொழில்நுட்ப ஊழியர்களுடன் சென்று சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில், ''இடி விழுந்ததில் வெளிப்பகுதியில் ஒரே லைனில் இணைப்பில் இருந்த கேமராக்கள் செயலிழந்தன. ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

அரசு
மே 09, 2024 10:40

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். மாறாக மாநில அரசை குறை சொல்லாதீர்கள்.


UTHAMAN
மே 09, 2024 10:55

தேர்தல் பார்வையாளர்கள் தவிர மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உட்பட அனைவரும் மாநில அரசு பணியாளர்களே மாநில அரசு பணியாளர்கள் மாநில அரசுக்குத் தான் அனுகூலமாக இருப்பர் தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுக்கு விரும்பும் பதவி வழங்கப் போவது மாநில அரசுதான் எனவே அவர்கள் மத்திய அரசு பணியாளர்கள் என பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்


Anantharaman Srinivasan
மே 09, 2024 10:20

முட்டையிட்டு கோழி அடை காப்பதுபோல் தேர்தல் முடிந்து நாட்கள் இயந்திரங்களை பாதுகாப்பது வேண்டாத வேலை ஒருசிலரின் தேவைக்காக/ அனுகூலத்திற்காக மக்கள் பணம் பலகோடிகள் தண்டசெலவு இந்தியாவில் ஆண்டுகளாக தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கு ஆனால் இதுபோல் நாட்களுக்கு முடிவுகளுக்கு காத்திருந்ததில்லை


UTHAMAN
மே 09, 2024 09:49

தொகுதிவாரியான வாக்குப்பதிவு சதவீதம் வாக்கு பதிவு நேரம் முடிவுற்றவுடன் தோராயமாக அறிவிக்கப்படும் பின்னர் படிவம் பி படி வாக்குச்சாவடிவாரியான வாக்குப்பதிவு எண்ணிக்கையும், சதவீதமும் மறுநாள் காலை அறிவிக்கப்படும் இந்த இரண்டுக்கும் வாக்குப்பதிவு சதவீதத்தில் சற்றே மாறுபாடுகள் இருக்கும் அவ்வளவே ஆனால் இந்த முறை மூன்று தடவைகளுக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றங்களை அறிவிக்கின்றனர் ஆண் பெண் வாக்குபதிவு படிவத்தையும் அதற்கான முன்பகுதியில் சரியாக கையாள தெரியாமல், அவர்களுக்கு அதற்கான பயிற்சியும் அளிக்காமல் மரத்தடியில் இருந்து கொண்டே ஏனோதானோ என புள்ளிவிவரங்களை அளித்துவிட்டதின் விளைவே இந்த சறுக்கல் மொத்தத்தில் தேர்தல் பணியில் ஒழுங்கீனம் எனலாம் இவ்வாறு கூறுவதில் ரோஷப்பட்டு பயனில்லை இனியாவது ஆட்சியாளர்கள் அரசு பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 09, 2024 09:34

ஒட்டு பதிவு செய்த இயந்திரங்களை ஒரு அறையில் வைத்து, பூட்டி, அரசாங்க சீல் வைத்து, கூடவே பிரதான அரசியல் கட்சியினரும் தனித்தனியாக சீல் வைத்தபின், யாரும் சீல் பிரிக்காமல் அறையில் நுழைய முடியாது இது பொதுவான விதி இதற்கு மேல் இருபத்துநான்கு மணி நேரமும் போலீஸ் காவல் மேலும் வேட்பாளர்களின் ஆட்கள் வேவு பார்த்துக்கொண்டே இருப்பார்கள் இதற்கும் மேல்தான் கேமரா கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு என்பது காவல் இருப்பவர்கள் கவனக்குறைவாக இருக்க கொடுக்கும் வாய்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்


venugopal s
மே 09, 2024 09:07

பாஜக இப்போது முதலே தமிழகத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்களை தயார் செய்து வைத்துக் கொள்வது போல உள்ளதே!


vijai seshan
மே 09, 2024 09:25

யாரு மாடல் அரசு ஆளா


vadivelu
மே 09, 2024 10:43

பா ஜா கா டிபாசிட்டை பெற்று விட்டாலே, பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டி விட்டவர்களுக்கு தோல்விதான் அதனால் தோல்விக்கான காரணத்தை தயார் செய்ய வேண்டிய நிலையில் இருப்பது பா ஜெ க இல்லை


vijai seshan
மே 09, 2024 09:05

திருட்டு மாடல்


Anbuselvan
மே 09, 2024 08:41

யார் தலையில் இடி விழ போகுதுன்னு தெரியலையே


RAAJA69
மே 09, 2024 08:29

CCTV இல்லாத காலங்களில் தேர்தல் நடக்கலயா. அப்போது நன்பகத்தன்மை இல்லையா. சும்மா புலம்பாதீங்க. எந்த சாதனமும் பழுது ஆகக்கூடியது தான்.


sridhar
மே 09, 2024 08:25

நிறைய வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம், பிறகு சதவிகித குழப்பம், இப்போது கேமரா குழப்பம் இவ்வளவு செலவு செய்து ஒரு கண்துடைப்பு தேர்தல் தேவையா பேசாமல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது தலைமை அதிகாரி ஒரு திமுக வட்ட செயலாளர் தானே


jayvee
மே 09, 2024 08:20

மாநில தேர்தல் ஆணையமும் மாநில அரசும் மிக சிறப்பான கூட்டணி அமைத்துள்ளனர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை