உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 புதிய பஸ்கள் நாளை வருகை

100 புதிய பஸ்கள் நாளை வருகை

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாளை, 100 புதிய பஸ்கள் வழங்கப்பட உள்ளது.அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 18,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. இதற்கிடையே, போக்கு வரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கும் பணி துரிதப்படுத்தப் பட்டு உள்ளது. 100 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் நாளை, சென்னை பல்லவன் இல்லத்தில் துவங்கி வைக்கிறார்.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கும்பகோணம், கோவை, விழுப்புரம் அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு இந்த புதிய பஸ்கள் பிரித்து அளிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி