உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று(அக்.,27) இலங்கை கடற்படை கைது செய்தது.தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ganapathy
அக் 27, 2024 15:01

ரொம்ப கூவுறீக...


Ganapathy
அக் 27, 2024 14:59

என்ன அவங்க அட்டூழியம் பண்ணிணாங்க? பலவருடங்கள் அட்டூழியம் பண்ணிட்டு தமிழ் திராவிடம் பின்னால் ஒளிபவன் இங்கிருக்கும் மீனவன்தான். தீவிரவாதிகளுக்காக போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் பெட்ரோலையும் காசு வாங்கி மனிதர்களையும் கள்ளக்கடத்தல் செய்பவன் மீனவனா மொதல்ல?


தமிழ்வேள்
அக் 27, 2024 11:34

போதைப்பொருள் கடத்தல் கேசில் இந்த பயல்களுக்கு ஆளுக்கு 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு இவர்களை பார்க்க எவருக்கும் பார்வையாளர்கள் விசா மறுத்தால் பிறகு கள்ள கடத்தல் மீன் திருடுதல் வேலைக்கு போகமாட்டார்கள்..


jaya
அக் 27, 2024 10:06

முதலில் நம்மவர்கள் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று திருடுவதை நிறுத்த வேண்டும் . மற்ற நாடுகளில் மீனவர்களை பிடித்தவுடன் அவர்களது படகை உடனே எரித்து விடுகிறார்கள்.


ஆரூர் ரங்
அக் 27, 2024 10:00

எல்லை தாண்டியது பாகிஸ்தான் ஆட்கள் என்றால் நாம் சும்மா விடுவோமா? யாழ்ப்பாண தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் காக்க இலங்கை சிங்கள கடற்படை செயலில் இறங்குவது ஆச்சர்யம்.


அப்பாவி
அக் 27, 2024 09:42

அவர்கள் தமிழக மீனவர்களாம். இந்திய மீனவர்கள் நு சொல்ல கசக்குது.


veeramani
அக் 27, 2024 09:10

ஏம்பா மீடியா நண்பரே ... உனக்கு இந்திய கடல் எல்லை பற்றி தெரியுமா. பாக் ஜலசன் டியில் உள்ள கடல் நீளம் சுமார் 18 கிமீ . இதில் நாடு எல்லை 5கிமீ வில் முடிகிறது பின்னர் எதற்கு நெடும்தீவு செல்கிறீர்கள் நெடும்தீவு பகுதி சிறிலங்காவிற்கு சொந்தம் அங்கு மீன் பிடிப்பவர்கள் இலங்கை தமிழர்கள் . அவர்களுக்கு உரித்தான மீன்களை நாடு இரவில் சென்று திருட்டுத்தனமாக வலை வீசி மீன்களை கொள்ளை அடிக்கலாமா ???. இதை தட்டிக்கேட்டால் ஒப்பாரியா.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 27, 2024 09:02

அது என்ன அட்டூழியம்? முதலில் இதுபோன்று எழுதுவதை நிறுத்த வேண்டும். உங்கள் வீட்டிற்குள் உங்கள் அனுமதி இல்லாமல் சிலர் நுழைந்தால் வரவேற்பீர்களா அல்லது வெளியே போகச் சொல்வீர்களா? அவர்கள் நாட்டின் எல்லை பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பது எப்படி தவறாகும்? அழையாத விருந்தாளிகளுக்கு தண்டனைதான் கிடைக்கும்.


SP
அக் 27, 2024 08:41

எல்லை தாண்டியது தவறுதானே? இதில் எங்கே அட்டூழியம் வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்கள் சொல்லும் தகவலைத்தான் செய்தியாக போடுகிறார்கள் .உண்மைதன்மையை பார்ப்பதில்லை.


புதிய வீடியோ