உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்கள்13 பேர் கைது

மீனவர்கள்13 பேர் கைது

புதுக்கோட்டை:கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 100 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்பரப்பில் விசைப்படகுகளில் மீன் பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று மாலையில் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை