உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிக்கரணையில் 150 சட்டவிரோத கட்டடங்கள்; 2 வாரங்களில் அகற்ற கெடு விதிப்பு

பள்ளிக்கரணையில் 150 சட்டவிரோத கட்டடங்கள்; 2 வாரங்களில் அகற்ற கெடு விதிப்பு

சென்னை: பள்ளிக்கரணையில் 150 சட்டவிரோத கட்டடங்களுக்கு வனத்துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 2 வாரத்துக்குள் குடியிருப்போர் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக, ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அவற்றை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, அதிகாரிகள் 150 சட்டவிரோத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 2 வாரங்களுக்குள் குடியிருப்போர் தானாகவே வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டடங்கள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இது குறித்து, சென்னை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், குவைட்-இ-மில்லத் நகர், காமாட்சி நகர் மற்றும் கே.பி.காந்தன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 13 ஹெக்டேர் (32 ஏக்கர்) சதுப்பு நிலம் அபகரிக்கப்பட்டு, 1,085 சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அகற்றப்படும். முதற்கட்டமாக, மகாலட்சுமி நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 50 குடிமக்களுக்கும், பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் நகரில் 100 குடிமக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நவ., 22ல் வெளியேற்றப்படும். ஐந்து ஆண்டுக்கு முன் மகாலட்சுமி நகர் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள குடிசைவாசிகளிடம் அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர். சட்டசபை தேர்தல் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. சதுப்பு நிலத்திற்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Education on Human Rights
நவ 10, 2024 08:27

போக்குவரத்து காவல்துறையினர் விபத்து நடக்காத வண்ணம் ஹெல்மெட் போட்டுக் கொள்ளவும் கார் சீட்டு பெல்ட் அணிந்து கொள்ளவும் தடுக்கப்படுகிறது. அதேபோல் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடக்கா வண்ணம் ஆங்காங்கே வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வார்களை தடுக்க 18 வயதுக்குள் இருக்கும் பெண்களை திருமணம் செய்வது சட்டத்தின் விரோதமானதுஅதுபோல் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு ஏன் தடுக்கவில்லை.


Education on Human Rights
நவ 10, 2024 08:19

இந்த கட்டிடங்களுக்கு அனுமதி யாரால் வழங்கப்பட்டது. இதற்கு முன் இவர்களுக்கு இந்த இடம் சதுப்பு நிலம் என்று தெரியாது. இது முழுக்க முழுக்க சென்னை பெருநகர் குழுமத்திற்கு தெரிந்திருக்கும்.. அப்போது ஏன் கட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


V GOPALAN
நவ 10, 2024 06:35

நமது இறை அன்புவிடம் முக்கியனான நீர்நிலை சம்பந்தமான துணிகர செயல் நேர்மையானவர் ஸ்டாலின் க்கு எடுத்து சொன்னால் செய்வர் என்று எதிர்ப்பது ஏமாற்றம் அடைந்தோம் இவர் காலத்தில்தான் மலை மஆற்றும் நீர்நிலை காணாமல் போயின


jayvee
நவ 08, 2024 18:13

CMDA ஒரு மிகப்பெரிய ஊழல் நிறுவனம்.. இங்குள்ள அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் கிடையாது.. ஒவ்வொவொரு அதிகாரியும் பியூன் உட்பட கோடீஸ்வரர்கள்... பெரும்பாலும் நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளை சார்ந்தவர்களே இங்கு அதிகம் பணி புரிவதும் சந்தேகமாக உள்ளது ...அதேபோல தலைமை செயலக அதிகாரிகளையும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு பணி மாற்றம் செய்யவேண்டும்...


Krishnamurthy Venkatesan
நவ 08, 2024 15:02

இங்கு அபார்ட்மெண்ட் போட்டு அப்பாவி பொதுமக்களிடம் விற்றவர்களுக்கும் அனுமதி அளித்த அரசு அதிகாரிகளுக்கும் அரசு சார்பாக பிரம்மாண்ட விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும்.


Ramesh Sargam
நவ 08, 2024 11:28

பள்ளிக்கரணை ஆக்கிரமிப்பு எல்லாம் ஒரு சில அரசியல் கட்சியினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக திமுக, அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று பரவலாக ஒரு பேச்சு. இப்படியே விட்டால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமல்ல, அந்த பகுதியே போச்சு.


V GOPALAN
நவ 10, 2024 06:38

ஆதம்பாக்கம் டு மடிப்பாக்கம் மெயின் ரோடு வாய்க்கால்கள் முழுவதும் கபளீகரம் செய்தாகிவிட்டது அடுத்து குடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் சைடு எரியும் மெதுவாக சூறை ஆடப்படுகிறது


JeevaKiran
நவ 08, 2024 10:20

அப்படியே சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையின் வலது புறம் சதுப்பு நில ஏரியில் கட்டியுள்ள தொழில் நுட்ப பூங்காக்களையும் அகற்றனும். செய்வார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை