உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்

1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பாக, 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி நாளில், வீதிகள் தோறும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். வரும் ஆக.,27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9t2tv3x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிம்ம வாகனம், சிவ பார்வதி, முருக விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அன்ன வாகனம், விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில், 3 அடி முதல், 11 அடி வரையில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் நடக்கும் விசர்ஜன விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்; கோவையில் அண்ணாமலை; மேட்டுப்பாளையத்தில் நடிகர் ரஞ்சித்; மதுரையில் மத்திய அமைச்சர் முருகன்; திண்டுக்கல்லில் திரைப்பட இயக்குநர் பேரரசு; கோபியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா; உடுமலையில் நடிகை கஸ்துாரி என, பலரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

hasan kuthoos
ஜூலை 24, 2025 09:20

இது தமிழன் கலாச்சாரம் கிடையாது, கலவர கலாச்சாரம்


Mettai* Tamil
ஜூலை 24, 2025 14:06

அரபு போன்ற வெளிநாட்டு கலாச்சாரம் அல்ல ..இது பச்சை தமிழன் கலாச்சாரம் ...பாரத நாட்டின் கலாச்சாரம்....


Svs Yaadum oore
ஜூலை 24, 2025 07:12

விநாயகர் சிலை ஊர்வலம் தமிழன் கலாச்சாரம் கிடையாது ஆனால் மேய்ப்பர் ஆடு மேய்ப்பது தமிழன் கலாச்சாரம் ...உருது அரபி மொழிதான் தமிழன் தாய் மொழி ....இதுதான் விடியல் திராவிடனுங்க தத்துவம் ...


Amsi Ramesh
ஜூலை 24, 2025 09:46

இது என்ன பிரமாதம்


மூர்க்கன்
ஜூலை 24, 2025 12:13

ஆன்மீகம் பாதை தவறி இங்கே போதையாகி விட்டது அதைத்தான் சாடுகிறார்கள் நல்ல பிறப்பாக இருந்தால் அந்த நல்ல நாளில் ஒன்றரை கோடி மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு கணேசனின் வயிற்றில் பால் வார்த்து இருப்பார்கள் ஆனால் இந்த அடிப்பொடிகள் ஒன்று சேர்ந்து ஒன்பதுகளின் நடனத்தோடு கல்வீசி கலவரம் செய்வார்கள் இவர்களை எல்லாம் திருத்துவது நம் பணி அல்ல. பிள்ளையாரே முகம் சுழித்து ஒதுங்கி விடுவார் இதுதான் எதார்த்தம்.


Mettai* Tamil
ஜூலை 24, 2025 14:24

தமிழ்நாட்டில் 1967 க்கு பிறகு ஆன்மீகம் பாதை தவறி இங்கே போதையாகி விட்டது . ஊழல் பெருத்து விட்டது . ஒரு குறிப்பிட்ட இந்து மதத்தை பற்றி மட்டும் கேலி கிண்டல் அவதூறு செய்யும் பிரிவினைவாத கூட்டம் பெருத்து விட்டது. நல்ல பிறப்பாக இருந்தால் இந்த சமூக விரோத செயல்களை செய்ய மாட்டார்கள் .இந்த சமூக விரோதிகளை களை எடுப்பதற்கு பிள்ளையாரே முகம் பார்த்தாலே ஏழு கோடி மக்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு , வயிற்றில் பால் வார்த்தது போலாகும் .


மூர்க்கன்
ஜூலை 25, 2025 04:00

நீர் நிலைகளை அசுத்த படுத்ததீர் என மகாராஷ்டிரா உயர் நீதி மன்றமே எச்சரித்துள்ளது ? மெட்டைக்கு மண்டையில் உரைக்குமா??


புதிய வீடியோ