உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்

இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்தில் மூன்று பேர் மரணமடைந்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள கரட்டுபாளையத்தை சேர்ந்தவர் முத்துரெட்டி(22), சுரேஷ்(21) இவர்கள் இருவரும் திருச்செங்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரியை முந்த முயன்றனர். அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மனோஜ் பிரபாகரன் என்பவர் பைக் மீது மோதினர்.இவ்விபத்தில் முத்து ரெட்டி மற்றும் சுரேஷ் இருவரும் லாரயின் அடியில் சிக்கி பலியாயினர்.

மற்றொரு விபத்து: திருச்செங்கோடு ஐந்துபடை‌ பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது மகன் பூபதி. இருவரும் திருச்செங்கோடு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர் இதில் பலத்த காயம் அடைந்த பூபதி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தார். இவ்விபத்துகள் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி