உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டில் வேலை என மோசடி ரூ.2.50 கோடி சுருட்டிய 2 பேர் கைது

வெளிநாட்டில் வேலை என மோசடி ரூ.2.50 கோடி சுருட்டிய 2 பேர் கைது

தஞ்சாவூர்:வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, 32 பேரிடம், 2.50 கோடி ரூபாயை மோசடி செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர், கும்பகோணம் மோதிலால் தெருவில், இருந்த சுசி கன்சல்டன்சி மூலம் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புவதை அறிந்து, அதன் உரிமையாளர், சாய் சுதாகரை அனுகினார். சாய் சுதாகர், கனடாவுக்கு ஆறு மாதங்களில் அனுப்புவதாக கூறி, 2022ல், 7.80 லட்சம் ரூபாயை ராஜாவிடம் பெற்றார். ஆறு மாதமாகியும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. சந்தேகமடைந்த ராஜா, சாய் சுதாகரை தொடர்புக்கொள்ள முயன்றும் முடியவில்லை. ராஜா, கும்பகோணத்திலிருந்த கன்சல்டன்சி அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அலுவலகம் பூட்டி இருந்தது. ராஜா புகாரின்படி, கும்பகோணம் மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை, வெட்டுவாங்கனியை சேர்ந்த சாய் சுதாகர், 41, அவரது நண்பரான கல்பாக்கம் மகேஷ்பாபு, 50, சேர்ந்து, வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக, 32 பேரிடம், 2.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவாகியது தெரிந்தது. இவ்வழக்கு, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, சாய்சுதாகர், மகேஷ்பாபு இருவரையும் தனிப்படை போலீசார் தேடினர். இந்நிலையில், கோவையில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !