உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஜாபர்களும் தி.மு.க., அரசின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள் எச்.ராஜா பேட்டி

2 ஜாபர்களும் தி.மு.க., அரசின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள் எச்.ராஜா பேட்டி

காரைக்குடி:தமிழகத்தின் இரண்டு ஜாபர்களும் தி.மு.க., அரசின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள் என்று பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.காரைக்குடி என்.ஜி.ஓ., காலனி அருகே சிவகங்கை லோக்சபா தேர்தல் பா.ஜ., அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இதில் பங்கேற்ற படின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ., மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக உருவாகியுள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய தேசிய மாற்று உருவாகி உள்ளது. மின்னணு ஓட்டு இயந்திரம் குறித்து ஞானம் இல்லாதவர்கள் தவறாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் கிளப்பும் புரளி. தமிழ்நாட்டில் 2 ஜாபர்கள் தி.மு.க., அரசின் சவப்பெட்டியின் இறுதி ஆணிகள். ஒன்று ஜாபர் சேட் மற்றொன்று ஜாபர் சாதிக். ஜாபர் சேட்டும் தி.மு.க., எம்.பி., ராஜாவும் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரி ஆளுங்கட்சி ஊழலுக்கு துணை போகிறார். சமூக வலைதள பதிவு போடுகிற பா.ஜ., பெண் நிர்வாகியை கைது செய்கின்றனர். கமலை பாராட்ட வேண்டும். தன்னுடைய செல்வாக்கு அறிந்து என்ன லாபம் வாங்க வேண்டுமோ வாங்கிக்கொண்டு தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை