உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் 3 பேர் கைது

ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் 3 பேர் கைது

வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய வீட்டுமனையை பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர், எழுத்தர், மற்றும் ஒப்பந்த ஊழியர் ஆகிய மூன்று பேரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்காரைக்குடியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தன்னுடைய அப்பா இறந்து போனதால் அப்பா பெயரில் இருந்த வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை தன்னுடைய தாயார் பெயருக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக பலமுறை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு அலைந்து உள்ளார் ஆனால் பெயர் மாற்றம் செய்து தருவதற்கு நிர்வாகப் பொறியாளர் ரவிச்சந்திரன் ரூ பத்தாயிரம் தருமாறு கேட்டதாகவும் அதனை அங்குள்ள பதிவு எழுத்தர் பாண்டியராஜ் என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறியிருக்கிறார் அவர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஓய்வு பெற்ற ஊழியர் ஆன பாலாமணி இடம் அந்த பணத்தை கொடுக்கும் படி கூறி இருக்கிறார் பாலாமணி ரூ பத்தாயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்ததை தொடர்ந்து வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் எழுத்தர் பாண்டியராஜ் ஒப்பந்த ஊழியர் பாலாமணி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
ஜன 31, 2024 22:33

வீட்டு வசதித்துறையில் பெயர் மாற்றுவதற்கே பத்தாயிரம் லஞ்சம் என்றால், துறையின் இடங்களை அப்படியே தனியாருக்கு தாரை வார்த்த மந்திரிங்க... எத்தனை கோடி வாங்கி இருப்பாங்க... ஆனா.. அவங்க மட்டும் வெளியே இருக்காங்களே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை