உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் : தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் இடையே உள்ள ராயல் பீச் பகுதியில் இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை பகுதியானது இலங்கைக்கு அருகேயுள்ளதால் இங்கிருந்து கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்கள், உணவு, மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.நேற்று எம்.ஆர்.பட்டினம் தொண்டிக்கு இடையேயுள்ள கடற்கரைப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராயல் பீச் பகுதியில் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். கடற்கரையில் பதுக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புடைய 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதனை கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி