உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

வயநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வயநாட்டில் சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.இவர்கள், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து 45 நிவாரண முகாம்களில் பதிவான விவரங்களை வைத்து தகவல் சேகரிக்கப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 31, 2024 20:43

மிகவும் வேதனை அளிக்கும் செய்தி. மக்கள் இனிமேலாவது இயற்கையை அழிக்காமல், இயற்கையை அரவணைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.


Kumar Kumzi
ஜூலை 31, 2024 20:38

கவலை வேண்டாம் விடியாத விடியல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து லட்சம் ஓவா தருவாரு...


Ram pollachi
ஜூலை 31, 2024 20:02

தமிழ்நாட்டில் இருந்த மலைகளை காணவில்லை என்று பலர் கதறுகிறார்கள்.... இந்த சோகத்தில் கூட பெரிய பெரிய கற்களை லாரியில் தினமும் கடத்துகிறார்கள் கண்டுகொள்ள ஆட்கள் இல்லை...


sundarsvpr
ஜூலை 31, 2024 17:15

விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவி கொடுப்பது அரசு மற்றும் மக்கள் கடமை. உடனே கொடுப்பது பண உதவி அல்ல. உடன் தேவை தத்தளிக்கும் நபர்களை காப்பாற்றி உடல் தேற வைப்பது. நிவாரண நிதி அரசுகள் உதவி மக்கள் உதவி ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து எவ்வாறு எப்படி எவ்வளவு குடும்பங்களுக்கு உதவி செய்வது பற்றி செய்யலாம். இப்போது கவனம் நிலைமையை சீர்செய்வதுதான். இதன் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதித்து ஒரு அணுகுமுறை கொண்டுவரலாம்.


Palanisamy Sekar
ஜூலை 31, 2024 16:59

வேலைவெட்டிக்கு போகாமல் போதைக்காக கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் குடித்த குடிகாரர்களுக்கு பத்து லட்சம் கொடுத்த அந்த வள்ளல் உழைத்து சம்பாதிக்க மாநிலம் விட்டு மாநிலம் சென்று வீணாப்போன ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் போன கம்யூனிஸ்டுகள் மாநிலத்தில் உயிர் இழந்தது கொடுமை. இவர்களின் குடும்பத்தினருக்கு ஐம்பது லட்சம் வரை உதவித்தொகையை அறிவிக்கணும் இந்த விடியல் பெயரில் நடக்கும் விடியாத ஆட்சியாளர்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ