உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி உட்பட 32 பேர் மாற்றம்

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி உட்பட 32 பேர் மாற்றம்

சென்னை:சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர் வாலண்டினா உட்பட, 32 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை, திருச்சி உட்பட பல்வேறு நீதிமன்றங்களில், மூத்த சிவில் நீதிபதிகளாக பணிபுரிந்த 12 பேருக்கு, மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகளாக இருந்த, 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.திருமகள், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர் வாலண்டினா, அரியலுார் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சென்னை உயர் நீதிமன்ற சட்ட இதழின் இணை ஆசிரியர் டி.டி.சக்கரவர்த்தி, சென்னை லோக் அதாலத் தலைவராகவும், திருப்பத்துார் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஓம்பிரகாஷ், சென்னை 14வது சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இதேபோல, ஈரோடு, ஊட்டி, கோவை, நாகை, ஸ்ரீவில்லிபுத்துார், தேனி, புதுச்சேரி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர்களும், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுஉள்ளனர். இதற்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி