உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32வது நினைவு தினம்: எல்.முருகன் அஞ்சலி

ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32வது நினைவு தினம்: எல்.முருகன் அஞ்சலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 1993ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வின் 32வது நினைவு தினம் இன்று (ஆக.,8) அனுசரிக்கப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.1993ம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 32ம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டதாவது: இஸ்லாமிய பயங்கரவாதத்தால் சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில், அன்று இதே நாளில் பலியான தேசபக்தர்களுக்கு சிரத்தாஞ்சலி செலுத்துகிறோம். கடந்த 1993ம் ஆண்டில், சென்னையிலுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது பயங்கரவாத அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலுக்கு, எந்தவிதமான காரணமும் அறியாமல் 11 ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் தங்களது இன்னுயிரை இழந்த தினம் இன்று. தேசம், தெய்வீகம், சமுதாயம் என்று வாழ்ந்து, இத்தகைய பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஆக 08, 2024 19:05

குற்றவாளிகள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்.... எத்தனை பேர் சிறையில் பிரியாணி விருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து.... மீண்டும் அதே வேலையை பார்கிறார்களோ ???


இறைவி
ஆக 08, 2024 17:51

உண்மைதான் விஜய் ஓவியம். பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது இஸ்லாமியர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். அதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் பாபர் மசூதி உபயோகம் இன்றி நூற்றாண்டுகளாக பாழடைந்து கிடந்தது என்பதை மறந்து விடுவோம். அதோடு ராமர் பிறந்த இடம் என்று அங்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக வழிபாட்டில் இருந்த கோவில் இஸ்லாமிய அரசர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டது மட்டுமில்லாமல் அந்த இடத்தில் கோவில் திரும்ப வரவேண்டும் என்று 500 வருடங்களாக இந்துக்கள் கதறினார்கள் என்பதையும் சேர்த்து மறந்து விடுவோம். தொழுகை இல்லாத மசூதி இடிக்கப்பட்டது வலி கொடுக்கக் கூடியது. அதனால் இஸ்லாமியருக்கு கண்ணில் இரத்தம். உண்மை. அந்த மசூதியே வழிபாட்டில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது இந்துக்களுக்கு தக்காளி சட்னி. வாழ்க்கை சக்கரம் சுழலும்போது நீங்களும் அதில் அடிபட வேண்டியிருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள். வெற்று அரசியலுக்காக பொய்யுறை கூறாதீர்கள்.


Barakat Ali
ஆக 08, 2024 16:10

பெரும்பான்மை ஹிந்துக்கள் மனதில் அவநம்பிக்கை, அச்சுறுத்தல் ஏற்படுத்திவிட்டு சிறுபான்மையினரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது ..... இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ளாமலிருப்பது ஆபத்து ......


ஆரூர் ரங்
ஆக 08, 2024 15:50

திமுக இருக்கும் வரை சிலிண்டர் ஆட்களுக்கு பயமில்லை. 32 ஆண்டுகளாக மிருக ஆட்டம் ஆடுகிறார்கள்.


Senthoora
ஆக 08, 2024 16:08

இதே நேரத்தில் காந்திஜியின் கொலையையும் நினைவுபடுத்துங்க, திமுகவா, RSS எது தப்பு என்று.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 08, 2024 21:53

செந்தூர, இப்படி எழுத வெட்கமாக இல்லையா? பாலைவனத்தில் இருந்து கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்கள் எத்தனை கோவில்களை இடித்து எவ்வளவு சொத்துக்களை கொள்ளை அடித்தார்களேயென்று தெரியாதா ? ஸ்ரீரங்கம் கோவிலை காக்க எத்தனை இந்துக்கள் இறந்தார்கள் என்று தெரியுமா? ஒரு முறை காசி, மதுரா கோவில்களை பார் நீ உண்மையான ஹிண்டுவிற்கு பிறந்து இருந்தால் உன் கண்களில் இருந்து இரத்தம் வரும். இல்லை என்றல் நீ யார் என்று சோதித்து பார்த்துக்கொள். காஷ்மீர், லாகூர், வங்காள ஹிந்துக்களுக்கு நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கலாம், அப்போது ஓடி ஒழிய உனக்கு வேறு எந்த நாடும் கிடையாது.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 08, 2024 22:43

செந்தூர இன்றைக்கு பாலைவனத்தில் இருந்து கொள்ளை அடிக்கவந்த மதத்தினர், இன்றும் ஹிந்துஸ்தானில் அநியாயங்கள் கொலைகள் குண்டுவெடிப்புகள் செய்வதற்கு மோகன்தாஸ் காந்தி, நேரு செய்த தவறுகள் தான் மூல காரணம். மதத்தின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்ட பின்னும் ஏன் இந்த நிலைமை என்று யோசனை செய்.


Oviya Vijay
ஆக 08, 2024 15:23

பாபர் மசூதி உடைக்கப் பட்டது இஸ்லாமிய சகோதரர்களின் இதயத்தை நொறுக்குவதாக அமைந்தது.


Duruvesan
ஆக 08, 2024 16:27

கோயிலை இடித்து வெறி ஆட்டம் ஆடிய ரத்த வெறி பிடித்த கூட்டத்தினால் ஹிந்துக்கள் இதயம் நொறுங்கியது


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ