உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவின் 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு

 ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவின் 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு

சென்னை: 'கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவிலிருந்து, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் சேர்க்கப்பட்ட 38 வருவாய் கிராமங்கள், முன்பு இருந்தவாறு, காவிரி டெல்டா பாசன பகுதியாக தொடரும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 15ம் தேதி, கடலுார் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்ட, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்' என அறிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்ட, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில், ஸ்ரீமுஷ்ணம், காவனுார் ஆகிய இரண்டு குறு வட்டங்கள், 51 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவிலிருந்து, ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் சேர்க்கப்பட்ட, 38 வருவாய் கிராமங்கள், முன்பு இருந்தவாறே, காவிரி டெல்டா பகுதியாக தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ