உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் எஸ்கேப்; சில மணி நேரத்தில் சிக்கினர்

கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் 4 பேர் எஸ்கேப்; சில மணி நேரத்தில் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் நான்கு பேர் தப்பிய சில மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினர்.குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டோர், அரசு கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய அரசு கூர்நோக்கு இல்லம் திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜன., 14) பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை தள்ளி விட்டு கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் கிடைத்ததும், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளியூர் செல்வதற்காக தப்பிச்சென்று கொண்டிருந்த சிறுவர்கள் நால்வரும், சில மணி நேரத்தில் போலீஸ் படையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜன 14, 2025 20:12

நான்கு சிறுவர்களை பிடித்த தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து காவல்துறையினர் மிகவும் பாராட்டி விருது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.


Ramesh Sargam
ஜன 14, 2025 20:09

அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளியை தமிழக போலீஸ் என்று கண்டுபிடிக்கும்? என்று தண்டிக்கும்? பெரிய பெரிய சுறா மீன்கள்களை விட்டு விட்டு, சிறிய சிறிய மீன்களை பிடித்து நானும் மீன் பிடித்தேன் என்று கூறிக்கொள்வதில் என்ன பெருமை?


Karthik
ஜன 14, 2025 14:30

நானும்தான் கண்டுபிடிச்சுட்டேன்.. இதுக்கு பேரு திருடன் போலீஸ் விளையாட்டு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை