உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்கல்வித்துறை சார்பில் இக்கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள். ஏற்கனவே, உயர்கல்வித்துறை சார்பில் 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் கடலூர் மாவட்டம் பண்ருட்டு, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மட்டும் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
மே 30, 2025 17:23

அறிவியல் அதாவது அறிவுக்கும் சம்பந்தமேயில்லையே அப்போ எப்படி அறிவியல் கல்லூரிகள் கொண்டுவரமுடியும்


பெரிய ராசு
மே 30, 2025 13:10

ஒரே வெத்து வேட்டு ஆசிரியர் கிடையாது உள்கட்டமைப்பு கிடையாது செய்முறை ஆய்வகம் கிடையாது முழுவது தொகுப்பூதிய ஆசிரியர் , பல்கலைக்கழகத்தினி உறுப்புக்கல்லூரி கட்டமைப்பை பிச்செடுத்து அல்லது மிரட்டி வாங்குவது ...உயர் கல்வியை தனியாரிடம் அடமானம் வைத்து ..ஏழைமக்கள் கனவில் மண்ணை போடும் திருட்டு திராவிட அரசு


Ramesh Sargam
மே 30, 2025 13:08

இன்று அரசு கல்லூரிகள் என்று ஆரம்பிக்கவேண்டியது. போகப்போக அதை கட்சியினர் ஆட்டைபோட்டு தனியார் கல்லூரிகளாக மாற்றவும் வாய்ப்பிருக்கிறது.


GMM
மே 30, 2025 10:31

தமிழக கலை, அறிவியல் கல்வி பயின்ற மாணவர்கள் தேவைக்கு மேல். இரு மொழி கொள்கை மூலம் தமிழகம் விட்டு பிற மாநிலங்களில் வேலை தேடுவது கடினம். தொழில் நுட்பம் கொண்ட தொழில் பயிற்சி, பாலிடெக்னிக், கட்டுமானம், விவசாய பயிற்சி போன்றவை கொடுத்து புதிய தலைமுறை உருவாக்க வேண்டும். கலை அறிவியல் பயின்றால், ஒரு தொழில் பயிற்சி கட்டாயம் ஆக்க வேண்டும்.உதாரணம் தமிழ், ஆங்கில டைப்பிங் . கம்ப்யூட்டர், செல் போன் ரிப்பேர் .


sangarapandi
மே 30, 2025 10:29

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தலைமை இடம் பேரையூரில் புதிதாக அரசு கலை ,அறிவியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் இதில் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் இந்த பகுதி தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும் .