அரியலூரில் வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் பத்திரமாக மீட்பு
அரியலூர்: அரியலூர் மாவட்டம், மருதையாறு நடுவில் சிக்கிய 7 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hnkgfjs5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தில் உள்ள மருதையாறு நடுவில், வெள்ளத்தில் 8 மாத குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேரில் சென்றார்.நீண்ட நேரம் போராடி, 7 பேரில் 4 பேரை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் மூன்று பேரை மீட்கும் பணிந்து வந்தது. பின்னர் அவர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.