மேலும் செய்திகள்
அம்மா மருந்தகங்களை மீண்டும் திறக்க வேண்டும்: பழனிசாமி
1 hour(s) ago
முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
2 hour(s) ago
சென்னை:தி.மு.க.,வில், மூன்று அதிகாரமிக்க பதவிகளை வைத்துள்ளதாக சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த, தன், 63வது வயதில், மாநில இளைஞர் அணி செயலர் பதவியை துறந்தார்;52 வயது நிரம்பிய, முன்னாள் அமைச்சர், வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு, அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.சென்னை அறிவாலயத்தில், ஜன., 4ல், தி.மு.க., பொதுக்குழு கூடியது. அதில், செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வுசெய்யப் பட்டார். பொருளாளர், மாநில இளைஞரணி செயலர் ஆகிய பதவிகளும், அவரிடமே இருந்தன; வேறு யாருக்கும் வழங்கப்படாதது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னிடமிருந்த, மாநில இளைஞரணி செயலர் பதவியை,ஸ்டாலின் நேற்று துறந்தார். இந்த பதவிக்கு, மாநில இளைஞரணி இணை செயல ராக இருந்த,முன்னாள் அமைச்சர், வெள்ளக் கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள் ளது. 52 வயதில், அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.சாமிநாதன் வகித்து வந்த, இளைஞர் அணி இணை செயலர் பதவிக்கு, 55 வயது நிரம்பிய, சந்திரசேகர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago