உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  வக்ப் சொத்துக்களை பதிவேற்ற 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு

 வக்ப் சொத்துக்களை பதிவேற்ற 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: 'வக்ப்' நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துக்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வக்ப் வாரியம் வெளியிட்ட அறிக்கை:

'உமீத்' சட்டத்தின் படி, வக்ப் நிறுவனங்கள், அதன் சொத்துக்கள் குறித்த விபரங்களை, உமீத் தரவு தளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம். இவ்விபரங்களை பதிவேற்றம் செய்ய, கடந்த 6ம் தேதி, இறுதி நாள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு வக்ப் வாரியம் சார்பில், கால நீட்டிப்பு கோரி தமிழ்நாடு வக்ப் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, இப்பணிகளை மேற்கொள்ள, தமிழகத்திற்கு கூடுத லாக ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உமீத் தரவு தளத்தில், வக்ப் நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் குறித்த விபரங்களை, 2026 ஜூன் 6ம் தேதி வரை, பதிவேற்றம் செய்யலாம். எனவே, வக்ப் நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துக் களை பாதுகாத்து பராமரித்திட, உமீத் தரவுதளத்தில் ஒரு மாத காலத்திற்குள், நிறுவனங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். உத்தரவினை செயல்படுத்த மறுக்கும் நிறுவனங்கள் மீது, உமீத் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கடல் நண்டு
டிச 20, 2025 06:08

6 மாதம் ?? 6 வருடமாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. சிறுபான்மையருக்கான ஆட்சி..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை