| ADDED : டிச 28, 2025 01:13 AM
புதுடில்லி: கடந்த நவம்பர் மாதம் வரையில் நாடுமுழுவதிலும் சுமார் 693 கோடி பேர் ரயில்களில் பயணித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: நாடு முழுவதிலும் பொதுமக்கள் குறைந்த செலவில் ரயில்களில் பயணித்து வருகின்றனர். அதன்படி இந்தாண்டு ஜன., முதல் நவ.,வரையிலான காலகட்டத்தில் சுமார் 693 பேர் பயணித்துள்ளனர். அதே நேரத்தில் 2024-2025 நிதியாண்டில் மொத்தம் 715 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இவர்களில் 81 பேர் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகள் உட்பட முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்துள்ளனர். மீதமுள்ள 634 கோடி பேர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத ரயில்களில் பயணித்துள்ளனர். இது இந்திய ரயில்வேயின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகும்.2022-2023 ம் நிதியாண்டில் 596 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனர். அதே நேரத்தில் 2023-2024 -ம் நிதியாண்டில் 648 கோடி பேர் பயணித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளையும் ஒப்பிடும் போது 52 கோடி பயணிகள் கூடுதலாக ரயில்களில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மகாகும்ப மேளா, துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத்பூஜை போன்ற முக்கிய திருாளின் போது 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்சேவைகள் இயக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜன13 முதல் பி்ப்., 28 வரை நடந்த மகா கும்ப மேளாவிற்காக சுமார் 17,340சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மார்ச் 1-ம் தேதி முதல் 22 வரை ஹோலி பண்டிக்கை்காக 1, 144 ரயில்கள் இயக்கப்பட்டன. இது2024-ம் ஆண்டில் இதே கால கட்டங்களில் இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். சத் பூஜைக்காக அக்.,1-ம் தேதி முதல் நவ.,30 ம் தேதிவரையில் சுமார் 12,383 ரயில்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.