உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம், மதுராந்தகம் பகுதிகளில் இன்று (மே15) அதிகாலை நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியாகினர்.புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற கார், கல்பாக்கம் அருகே இ.சி.ஆர்., சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் விக்கி, ஏழுமலை, ராஜேஸ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மற்றொரு சம்பவத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 4 பேர் பலியாகினர். இவ்விபத்தில் கடலூரைச் சேர்ந்த ஜெய் பினிஷா, சரவணன், மிஷால், பைசல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
மே 15, 2024 11:04

தமிழ் நாட்டில் நடக்கும் பெரும்பாலும் நடக்கும் சாலை விபத்தில் உயிர் இழப்புகளுக்கு காரணம் ஓட்டுபவர்கள் மித மிஞ்சிய வேகத்தில் செல்வது தற்சமயம் ECR ரில் சாலை வளைவுகள் அதிகம் அதுவும் வடபட்டினதத்திலிருந்து கல்பாக்கம் புதுபட்டினம் வரை சாலையில் மரங்கள் அதிகம் அதன் நிழலால் சாலையை முழுவதும் ஆக்ரமித்திருக்கும் அப்போது பார்வை நமக்கு சரியாக சாலை தெரியாது மேலும் பாலாறு பாலம் கடந்த வுடன் மணல் லாரிகள் ஆங்காங்கே நிற்கும் இதுவும் விபத்திற்கு ஒரு காரணம் பொறுமையில்லாமல் மற்ற இரு வழி இல்லாத இடத்தில் முன்ன செல்லும் வாகனதைய்ய முந்துத எத்தனித்தல் இச்சாலையில் அல்லது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல கூடாது இது போல் செங்கல்பட்டு புர வழிச் சாலையில் பாலாறு பாலம் உள்ள சாலையில் மித வேகம் நல்லது, பெரிய வளைவுகள் சிறு சாலைகள் குறுக்கிடும் இடத்தில் பொறுமையற்ற சிறிய வேன் ஆட்டோக்கள் லாரிகள் குறுக்கிடும் என்ற எண்ணத்தில் ஓட்ட வேண்டும் அது போல் செர்வீஸ் ரோட்டிலிருந்து வேகமாக வரும் வாகனம் கவனித்தில் கொள்ள வேண்டும்


ram
மே 15, 2024 10:38

இப்போது போதை மருந்து உட்கொண்டு ஜாலி ட்ரிப் போவதால் இதுபோல விபத்துக்குள் இரண்டு வாரம் முன்பு மூன்று ஆண்கள் ஒரு பெண் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்தை உண்டு பண்ணி அப்பாவி குடும்பத்தை கொன்று விட்டார்கள் அனால் குடித்துவிட்டு காரை ஓடின நபர்களுக்கு ஒன்னும் ஆகவில்லை என்ன நீதிமன்றத்தில் போய் பெனால்டி கட்டிவிட்டு, அடுத்து கொலைக்கு அச்சாரம் போடுவார்கள்


Palanisamy Sekar
மே 15, 2024 09:57

கார் ஓட்டுனர்களுக்கு ஓட்டுநர் உரிமையை கொடுக்கும் முன்னர் அவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய செய்திகளை சொல்லி தருவதில்லை மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு போகாமலேயே ஓட்டுனர் உரிமையை பெற்றுக்கொள்கின்றார்கள் பந்தாவாக கார் ஓட்டுவதும், காரில் ஏறியதும் என்னமோ தங்களை அம்பானி லெவலுக்கு பாவனை செய்துகொண்டு பந்தயத்தில் ஓட்டுவதாக கற்பனையில் அளவுகடந்த வேகத்தில் ஓட்டுவதால் இவ்வளவு விபத்துக்களும் நடக்கின்றது அல்லது தண்ணிபோட்டுக்கொண்டு தூக்கம் தொலைத்து ஓட்டுவதும் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டுவதும் காரணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிக்கை ஒன்றில் போரில் இறந்தவர்களை காட்டிலும் வாகன இறப்பவர் விகிதம் அதிகம் என்றது இப்போது அதே விகிதம் மூன்று மடங்குக்கும் மேல் இருக்கக்கூடும் சாலையில் கவனம், சாராயம் குடிக்காமல், போதையில் இல்லாமல், குடும்பத்தின் மீதான அக்கறை இதெல்லாம் கவனத்தில் கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் உண்டு அதிவேக பயணம் அதிவேக மரணம் நிச்சயம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை