உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடுப்பு கம்பியில் சிக்கிய பைக்; தீயில் கருகி ஐ.டி., ஊழியர் பலி

தடுப்பு கம்பியில் சிக்கிய பைக்; தீயில் கருகி ஐ.டி., ஊழியர் பலி

கீழ்பென்னாத்துார் : பெங்களூரு தனியார் நிறுவன ஐ.டி., ஊழியர் முகமது ஷாப், 23, மூன்று நண்பர்களுடன் தனித்தனி பைக்கில் புதுச்சேரி சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் பைபாஸ் சாலை அருகே சென்றபோது, இரும்பு தடுப்பு கம்பி மீது முகமது ஷாப் ஓட்டிச்சென்ற, 'அப்பாச்சி' பைக் மோதியது.இதனால் பைக்கில் அந்த தடுப்பு கம்பி சிக்கி, 10 மீட்டர் துாரம் இழுத்து சென்றது. அப்போது பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.தீயில் சிக்கிய முகமது ஷாப், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஜன 01, 2024 17:15

பைக் ஓட்டும்போது ஹெலிகாப்டர் ஓட்டுவதாக நினைப்பு.. உபரி செய்தி.. பாண்டியில் கிளம்பும்போது சோமபானம் அதிகம் குடித்து இருப்பார்.. கண்மண் தெரியாமல் ஓட்டினால் விபரீதம் தான் ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை