உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு: திருமாவளவன் பேட்டி

குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு: திருமாவளவன் பேட்டி

சென்னை: 'குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கவலை அளிக்கிறது' என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தனி பெரும்பான்மை பெற முடியாத நிலை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டு உள்ளது. இது பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு. மோடி அலை வட இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மோடி அலை என்பது மாயை. இண்டியா கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் எண்ணி முடிக்கும் நிலை இருக்கிறது. ஆகவே இதை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.

பாதிக்கு பாதி இழப்பு

இண்டியா கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. வழக்கமாக உத்தரபிரதேசத்தை வைத்து தான் அரசியல் காய் நகர்த்தப்படும். உத்தரபிரதேசத்தில் பா.ஜ., பெரிய வெற்றியை பெறும் என சிலர் நம்பி கொண்டிருந்தனர். ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்தது வெற்றி பெறவில்லை. உத்தரபிரதேசத்திலேயே பாதிக்கு பாதி இடங்களை அவர்களால் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

arul raj
ஜூன் 06, 2024 08:35

கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுத்தை பாவம்.


S Ramachandran
ஜூன் 05, 2024 19:08

குதிரை பேரம் விசிக எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்கள் தான் பேரம்.பேசும் திருமாவளவன் என்ன பேசுகிறார் என்றே அவருக்கே தெரியவில்லை


Balasubramanian Sundaram
ஜூன் 05, 2024 19:01

இவரெல்லாம் கருத்து சொல்ல கூடிய அளவு நாம் மோசமில்லை. தமிழ் மக்கள் இவரை போன்றவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். தமிழ்மக்களே பைத்தியக்கார கூட்டத்திலிருந்து அண்ணாமலை போன்றவர்களை கொண்டு வர முயற்ச்சிப்போம்


Ramani Venkatraman
ஜூன் 05, 2024 09:38

இவரு ஏன் அநியாயமா தன்னோடு கூட்டணியையே இப்படி காட்டிக் கொடுக்கறார் ஹார்ஸ்-டிரேடிங் குறை உள்ளவன் பண்ணுவானா, பெரும்பான்மை பெற்றவன் பண்ணுவானா இல்லை, இவருக்கு அந்தப் பக்கம் தாவுவதில் விருப்பமா...வந்தமா, போட்ட துண்டை கவ்விகிட்டுப்போனமா னு இருக்கிறதை விட்டுட்டு ஸ்டேட்மென்ட் விடறாரு பாரு


Vijayakumar Srinivasan
ஜூன் 05, 2024 09:05

எந்தகூட்டணி அட்சிஅமைத்தாலும். 6or7 மாதங்களளில் தேர்தல் வரவாய்ப்பே உள்ளது. இண்டி கூட்டணி ஒற்றுமை. திட்டங்கள் ஏதும் இல்லை. திசைக்கு ஒன்றாக. உள்ளது.. தடிஎடுத்தவன் தண்டல்காரன் கதைதான். அவர்களையும் நம்பமுடியாது. கடைசியல் கூப்பாடு. சத்தம். வெளிநடப்பு பழயமாதிரிதான். மக்கள்பாடு திண்டாட்டம்தான்


S MURALIDARAN
ஜூன் 05, 2024 08:48

லெட்டர் பேட் கட்சிக்காரர், ஒரு துண்டு ரொட்டிக்காக அலைபவர், பஞ்சோந்தி - இவரையும் மனிதனாய் பாவித்து பேட்டி போடும் தினமலரை சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஜாதியை சொல்லி கிளப்புவார்கள் என்ற பயம் - எல்லாம் கலியின் கோலம் வேறென்ன கூற ? தமிழ் நாட்டின் தலைவிதி தமிழக மக்களே காரணம்.


KK RANGAN
ஜூன் 05, 2024 07:16

ஏன்? பேரம் பண்ணி பேரம் கழுதை பேரம் எல்லாம் பண்ணக்கூடாதா? நீ தமிழ் நாட்டு ஜனங்களை போல ஒசிக்கும் காசுக்கும் அலையுறவன்.. பேரம் காசுக்கு ஜனங்க ஒட்டு போடணும் உனுக்கு ஆனா பாஜபா பேரம் பண்ணக்கூடாதா? பாஜபா கூட்டணி என்டிஏ மெஜாரிட்டி சீட் 292 எடுத்தாச்சு பாடு......நீ மூடு....


infoway ganesh
ஜூன் 04, 2024 22:46

காங்கிரஸ் கூட்டணி தான் சந்தரபாபு மற்றும் நிதிஷ்குமாரிடம் பேச்சை துவங்கிஉள்ளது .காங்கிரஸ் என்றால் ஊழல் தான்


A MN
ஜூன் 04, 2024 21:07

Parkalam


Nagarajan D
ஜூன் 04, 2024 20:43

உனக்கெல்லாம் பன்றி பேரம் தான் நடக்கும்... நீயெல்லாம் குதிரை என்று நினைக்காதே...


PRABA
ஜூன் 05, 2024 07:35

Super பான்டஸ்டிக் எக்ஸலெண்ட் .கூட்டணி மந்திரி அபாயம். நோட் ஒன்லி மோடிஜி. இந்தியா கூட்டணியின் ஊழல் சம்பிராஜ்யம் .விரய்வில் தேர்தல் நதயபெரும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ