உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024- - 25ம் நிதிஆண்டில், ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட, வீட்டுக்கு, 3.50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்கும் பணிகளில், இதுவரை, 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு தரப்பில், 150 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், 450 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !