வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமையான பதிவு
மேலும் செய்திகள்
இன்று முதல் 19 வரை மிதமான மழை பெய்யும்
14-Aug-2025
சென்னை: 'வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில், 15, சின்கோனா, உபாசி, சோலையார் ஆகிய பகுதிகளில், தலா 12 செ.மீ., மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. வடமேற்கு, அதை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. https://x.com/dinamalarweb/status/1956875709307044345வடக்கு, தென் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் ஆக., 22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அருமையான பதிவு
14-Aug-2025