உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்

2,000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகம் முழுதும், 2,000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மாநிலம், 35,000க்கும் அதிகமான, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் ஏற்கனவே, ஹைடெக் ஆய்வகம், உயர்தர அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்காக, முதற்கட்டமாக, 2,000 பள்ளிகளில் கேமராக்களும், பிராட்பேண்ட் இணைப்புகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 1,646 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகள், கேமராக்கள் பொருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளில், ஜூன் மாதத்துக்குள் கேமராக்கள் பொருத்தி, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.வளாகங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வோர், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R Kay
ஜன 18, 2024 15:48

ஆட்டைய போட அடுத்த திட்டம் ரெடி சும்மாவா சொன்னார் விஞ்ஞான ஊழல் என்று.


Raa
ஜன 18, 2024 12:03

ஆகா கழக உடன்பிறப்புகளே, வாங்க.. வாங்க தேர்தல் செலவு செய்ய நீங்கள் கொடுக்கவேண்டியதை உங்கள் ஒப்பந்தம் மூலமாக அரசு கொடுக்கும்... கட்சிக்கு திருப்பி கொடுத்துவிடுங்கள்.


duruvasar
ஜன 18, 2024 10:24

கட்சிக்கு எதிராக செயல்படும் ஆசிரியர்களை வேவு பார்க்கிறீர்களா ?


Ramesh Sargam
ஜன 18, 2024 07:53

விவசாயிகள் விளைவிக்கும் அரிசி போன்ற விளைபொருட்களை, மழை, வெயில் போன்ற இயற்கை அழிவிலிருந்து காப்பாத்த பணம் இல்லை.


அப்புசாமி
ஜன 18, 2024 07:22

புது ஆட்டை ஆரம்பமாகிறது.


Kasimani Baskaran
ஜன 18, 2024 05:19

தண்ணீர் தொட்டிக்கு மூடி போட துப்பில்லை - ஆனால் காமிராவாம், ஹைடெக் ஆய்வகமாம், பிராட் பேண்டாம்... கலர்கலராக ரீல் விடுவதில் மாடலுக்கு இணை மாடல்தான்...


Mani . V
ஜன 18, 2024 05:08

இதில எப்படியும் ரூபாய் 423 கோடிக்கு பில் போட்டு சுருட்டி விடலாம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை