உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகத்தில் அச்ச உணர்வு: கவர்னர் ரவி

பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகத்தில் அச்ச உணர்வு: கவர்னர் ரவி

சென்னை: பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு காணப்படுகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற ராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfx89272&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

பட்டாச்சாரியார் மறுப்பு

சென்னை, மேற்குமாம்பலம் கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறையை உணர்ந்ததாக கவர்னர் ரவி கூறியதற்கு, கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் முகங்களில் அச்சம் வெளிப்படவில்லை என பட்டாச்சாரியார் மோகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Indhuindian
ஜன 23, 2024 06:56

சரியாத்தான் சொல்லி இருக்காரு அர்ச்சகர்களை ஆகம விதிக்கு புறம்பாக அங்கே இருக்கற அறமற்ற துறை அதிகாரிகள் நிர்பந்த படுத்துகிறார்கள் ஒரு உதாரணம் - பல கோயில்களில் இந்து அல்லாதவர்களுக்கு கொடிமரத்தை கடந்து செல்ல தடை ஆனா இங்கே அப்படியா நடக்குது இந்து அல்லாத ஒரு மந்திரி எப்படி உள்ளே போயி வணங்கி அர்ச்சகரிடம் மாலை பரிவட்டம் பிரசாதம் என நடக்குது அர்ச்சகர் மாட்டேன்னு சொன்ன உடனே இருக்கு அனைவரும் அர்ச்சர்கர் ஆக்லாம்னுட்டு. ஆடட்டும் இன்னும் எத்தனைநாளைக்கு பாத்துடுவோம்


Kasimani Baskaran
ஜன 23, 2024 05:56

ஆடவிட்டு அடக்குவது பாஜகவுக்கு புதிதல்ல.


Indhiyan
ஜன 23, 2024 00:29

நன்றாக கவனியுங்கள். அர்ச்சகர் அச்சம் இல்லை என்று சொல்லவில்லை. முகத்தில் அச்சம் வெளிப்படவில்லை என்று தான் கூறி உள்ளார்.


g.s,rajan
ஜன 22, 2024 22:08

தீய சக்திகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகத்தில் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் தீராத கலக்கம் தான்,மன உளைச்சல்கள் தான்அதிகார துஷ்ப்ரயோகத்தால் ஆட்சி செய்பவர்கள் மீது தீராத வெறுப்புத் தான் ஏற்படுகிறது


Rajarajan
ஜன 22, 2024 21:05

இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், சென்னை மயிலாப்பூரில், ஒரு பிரசித்திபெற்ற கோவிலின் குருக்கள், சில வருடங்கள் முன்பு தாக்கப்பட்டது நினைவிருக்கும்.


muthu
ஜன 22, 2024 20:31

In BJP ruled state , let gov verify how temple priest were and their salary compared to TN


Arul Narayanan
ஜன 22, 2024 19:14

அந்த பயம் எல்லாம் 1967லேயே வந்து விட்டது தான்.


ramesh
ஜன 22, 2024 17:33

அரண்டவன் கண்ணுக்கு இருந்தது எல்லாம் பேய் .ஆளுநர் வேலையே தவிர வேறு எல்லா வேலையும் செய்கிறார்


Saravanan
ஜன 22, 2024 17:13

அவுரன்கஸிப் -அன் கோ பார்த்து தமிழக மக்கள் ஆடிய ஆட்டம் என்ன என்று பாடும் காலம் வெகு தூரத்தில் இல்லை ஒரு விஷயத்த மறந்து விட்டார் திமுகவுக்கு தனிப்பட்ட ஒட்டு பலம் ஜஸ்ட் 27%


Sundar
ஜன 22, 2024 16:12

பட்டாச்சார்யா அடுத்த மாதம் சம்பளம் வாங்கணுமே... அதற்காகத்தான் மறுத்துள்ளார்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ