மேலும் செய்திகள்
தினம் ஒரு சாஸ்தா :தமிழக ஐயப்பன் கோயில்கள்-07
22-Nov-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.கவலை இனி இல்லை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகிலுள்ள திப்பணம்பட்டி குளக்கரையில் கைக்கொண்ட ஐயனார் அருள்பாலிக்கிறார். இப்பகுதி மக்களின் குலதெய்வமாக திகழும் இவர், பக்தரான திருமலை அளித்த உணவை பங்குனி உத்திரத்தன்று கையால் வாங்கி உண்டதால் இப்பெயர் பெற்றார். ஆங்கிலேய ஆட்சியின் போது ரயில்வே அதிகாரி ஒருவர், திருநெல்வேலிக்கும் தென்காசிக்கும் இடையே ரயில்பாதை அமைக்க கோயிலை இடிக்க இருப்பதாக தெரிவித்தார். அப்போதே அந்த அதிகாரி ஏறி வந்த குதிரை அங்கேயே இறந்தது. சுவாமியின் சக்தியை உணர்ந்த அதிகாரி தன் உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இங்கு பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், பிரம்ம சக்தி, பாதாள பைரவி, பேச்சியம்மன், சிவன் அணைந்த பெருமாள், சுடலை மாடன், பூதத்தார் உள்ளனர். தென்காசியில் இருந்து 12 கி.மீ.,நேரம்: காலை 10:00 - மதியம் 2:00 மணிதொடர்புக்கு: 97893 83682அருகிலுள்ள தலம்: விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் 30 கி.மீ., நேரம்: காலை 6:00 - 9:00 மணி மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04634 - 223 457
22-Nov-2024