உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.7 முதல் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்; ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

ஜன.7 முதல் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்; ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

தேனி; ''சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,7 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,'' என, தேனியில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.இச்சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் அவர் பேசியதாவது: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறையின் துாய்மை பணியாளர்கள், காவலர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பாரத திட்ட அலுவலர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12 ஆயிரத்து 593 முதல் அதிகபட்சம் ரூ. 15 ஆயிரத்து 593 வழங்க வேண்டும். ஆனால் எந்த பணியாளருக்கும் இந்த ஊதியம் வழங்குவதில்லை. ஊரக வளர்ச்சித் துறையில் துாய்மை பாரத திட்டம், தனிநபர் கழிப்பறை திட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை அமல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ., வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன் 2025 ஜன.,7 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ